பல மோசடி வழக்கில் சிக்கி இடைக்கால ஜாமீனில் வெளிவந்த சுகேஷ் சந்திரசேகர் பாலிவுட் பிரபலம் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியான நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
வைரலாகி வரும் புதிய படத்தில், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், சுகேஷ் சந்திரசேகரை கட்டிப்பிடித்து முத்தமிடுவது போலவும், அதை சுகேஷ் செல்ஃபி எடுப்பது போலவும் உள்ளது. இந்தப் புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், 200 கோடி ரூபாய் மிரட்டி பணம் பறித்த வழக்கில் அமலாகத்துறை விசாரிக்கப்பட்டதால், சுகேஷுடன் டேட்டிங் செய்வதாக வந்த வதந்திகளை ஜாக்குலின் மறுத்தார். கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரிகிறது.
முன்னதாக, சுகேஷ் சந்திரசேகர் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுடன் ரொமான்டிக்காக இருக்கு ஒரு புகைப்படம் வெளியானது. அதுவும் அந்த செல்ஃபியில் தெரியும் ஐஃபோன் 12 ப்ரோ, அமலாக்கத் துறையினர் விசாரணையின் போது கைப்பற்றி ஆய்வுக்கு உட்படுத்திய ஃபோன் என்பது கூடுதல் தகவல். அந்த ஃபோனில் சுகேஷ் இஸ்ரேல் நாட்டில் பெறப்பட்ட சிம்மைப் பயன்படுத்தி வந்தார்.
அண்மையில் ஜாக்குலின், சுகேஷ் காதல் பற்றி கிசுகிசு செய்திகள் வெளியாக அதனை ஜாக்குலின் திட்டவட்டமாக மறுத்துவந்தார். ஆனால் தற்போது அவர்கள் இருவரும் சினேகமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
யார் இந்த சுகேஷ் சந்திரசேகர்?
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவர் இரும்புக் கோட்டை என்று அழைத்துவந்த அதிமுக ஆட்டம் கண்டிருந்த காலம் அது. அப்போது அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்காக போட்டாப் போட்டி நடந்து கொண்டிருந்தது.
இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகரை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2017-ல் கைது செய்து, திஹார் சிறையில் அடைத்தனர். அவர் மீது 21-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
200 கோடி அபகரிப்பு:
சிறையில் இருந்து கொண்டும் கூட சுகேஷ் சும்மா இல்லை. ரூ.200 கோடி மோசடியில் ஈடுபட்டார். அவரது அப்போதைய காதலி, லீனா மரியா மூலம் இந்த அபகரிப்பில் ஈடுபட்டார்.