பிரபல நடிகர் ஜாக்கிசானின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகியுள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். 


இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தில் ஒரு காட்சி வரும். பைத்தியம் போல் இருக்கும் டேனியை பார்த்து அன்பு (கலையரசன்) ஒரு காலத்தில் எப்படி இருந்த மனுஷன் தெரியுமா? என்ற வசனம் பேசுவார். நம் கண்முன் வாழ்ந்த ஒரு மனிதர் வயதாக வயதாக அந்த தோற்றம் மாறும்போது எப்படி ஏற்றுக் கொள்ள முடியாதொ அப்படி ஒரு நிலை தான் தற்போது ஏற்பட்டுள்ளது. பிரபல நடிகர் ஜாக்கிசானின் புகைப்படம் ஒன்று வெளியாகி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


ஒரு காலக்கட்டத்தில் ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்த ஜாக்கிசானுக்கு தற்காப்பு கலைகள் தெரியும் என்பதால் ஸ்டண்ட் மாஸ்டராக தனது பணியை தொடங்கினார். ஸ்டண்ட்களில் உயிரைக் கொடுத்து வேலை செய்ததால் வில்லி சான் என்பவரின் கவனத்தைப் பெற்றார். fist of fury என்ற படத்தின் மூலம் நடிக்க தொடங்கினார். 






ஆக்‌ஷன் காட்சிகளை எப்படி நகைச்சுவையாக மாற்றலாம் என்ற ஐடியாக்களை தன்னுடைய படத்தில் புகுத்தியதில் ஜாக்கிசான் நடித்த படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்தது. அவர் கவர்ச்சி படங்களிலும் நடித்துள்ளார். தன் மீதான விமர்சனம் என வந்தால் அதில் உண்மை இருந்தால் தயக்கம் இருந்தால் ஒப்புக் கொள்ளவே செய்தார். இவரின் ஆக்‌ஷன் காட்சிகளில் முகம் தொடங்கி எலும்புகள் வரை எல்லாம் சின்னாபின்னமாகியிருக்கிறது. மண்டையோட்டில் கூட அடிபட்டு இருக்கிறது. காப்பீட்டு நிறுவனங்கள் கையெடுத்தும் கும்பிடும் அளவுக்கு ஜாக்கிசான் ஆக்‌ஷன் காட்சிகளில் அடிவாங்கியிருக்கிறார். 


போலீஸ் ஸ்டோரி, டிராகன் லார்ட், ரஷ் ஹவர், கராத்தே கிட், ஷாங்காய் நூன், டிரங்கன் மாஸ்டர் என ஜாக்கிசானின் பல படங்கள் தமிழில் சக்கைப்போடு போட்டது. இன்றைக்கும் அவரின் புகழ் உலகமெங்கும் பரவ இப்படங்கள் காரணமாகின. ஜாக்கியின் புகழ் சுட்டி டிவியில் கார்ட்டூன் தொடர்களாவும் வெளியாகியது. இப்படியான நிலையில் ஜாக்கிசானுக்கு தற்போது 69 வயதாகி விட்டது. அவரின் வயதான தோற்றம் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என ரசிகர்கள் குமுறி வருகின்றனர்.