2022ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக உள்ளது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார். நடிப்பு ஜாம்பவான்கள் என கொண்டாடப்படும் , மும்மூர்த்திகளை ஒரே திரையில் காட்டும் முயற்சியை கையில் எடுத்தார் லோகேஷ். படத்தில் ஏராளமான நடிகர்கள் களமிறக்கப்பட்டாலும் கமல்ஹாசன் , விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் உள்ளிட்டோரின் காம்போதான் ஹைலைட்.
விக்ரம் படத்தை கமலுக்கு சொந்தமான ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் படத்திற்கு இசையமைத்து வருகிறார். படத்தின் ஃபஸ்ட்லுக் பாலிவுட் வரையில் பட்டையை கிளப்பிய நிலையில், கமலின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான முதல் glance வீடியோவும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அவ்வபோது தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் அப்டேட்டை வெளியும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது படப்பிடிப்பு முடிந்தது தொடர்பான அப்டேட்டை வீடியோ ஒன்றுடன் வெளியிட்டுள்ளார்.
110நாட்களுக்கு பின் படப்பிடிப்பு முடிவடைந்தது. கடுமையாக உழைத்த படக்குழுவுக்கும் நடிகர் நடிகைகளுக்கும் நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார். அதோடு பஹத் துப்பாக்கி சுடும் வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் லோகேஷ் ஆக்ஷன் என்றதும் பஹத் கையில் இருக்கும் துப்பாக்கியை வைத்து சுடுகிறார். ஷாட் ஒகே என்றதும் படப்பிடிப்பு முடிந்தது என்கிறார் லோகேஷ். அங்கிருக்கும் படக்குழுவினர் உற்சாகமாக கத்துகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்