‘அயலான்’ படம் எந்த மாதிரியான படமாக வந்திருக்கிறது என்பது தொடர்பாக அந்தப்படத்தில் நடித்த ஈஷா கோபிகர் பகிர்ந்தவற்றை இங்கு பார்க்கலாம். 


இது குறித்து ஈஷா கோபிகர் கூறும் போது, “ இறுதியாக பாலிவுட் தென்னிந்திய கலைஞர்களை பாராட்ட ஆரம்பித்து இருக்கிறது. பாகுபலி, ஆர்.ஆர்.ஆர், புஷ்பா படங்களின் வெற்றிக்கு பிறகு பாலிவுட் தென்னிந்திய கலைஞர்களை பயன்படுத்த ஆரம்பித்து இருக்கிறது. நான் நடித்த தென்னிந்திய படங்கள் சூப்பர் ஹிட் ஆகியிருக்கின்றன. அவர்கள் என்னை இதயப்பூர்வமாக என்னை வரவேற்றனர்.” என்றார். 


 






தொடர்ந்து பேசிய அவர், “ நான் சிவகார்த்திகேயன் நடிக்கும்  ‘ அயலான்’ படத்தில் நடித்து இருக்கிறேன். அது ஒரு ஏலியன் படம். சயின்ஸ் ஃபிக்சன் கான்செப்ட். அதில் ரகுல் ப்ரீத் சிங், சரத் கேல்கர் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  


இந்தியாவிலேயே முதன்முறையாக ஏலியன் சயின்ஸ் ஃபிக்சன் மற்றும் கிராஃபிக்ஸ் படமாக அது உருவாகி வருகிறது. இதற்கு முன்பு இது போன்று வந்த படங்களில் ப்ரோஸ்தட்டிக்ஸ்  (prosthetics) நிறைய பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்தப்படத்தை ஷூட் செய்வதற்காகவே ஒரு வருடம், போஸ்ட் புரோடக்‌ஷனுக்கு ஒரு வருடம் என வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த வருட இறுதியில் இந்தப்படம் ரிலீஸ் ஆகும் என நினைக்கிறேன்” என பேசியிருக்கிறார். 


சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான  ‘டாக்டர்’ ‘டான்’ ஆகிய இரு படங்களும் 100 கோடி வசூலை எட்டியது. அடுத்ததாக தீபாவளிக்கு தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் கடந்த ஜூன் மாதம் வெளியாகியிருந்தது. இப்படத்தில் நடிகை மரியா, நடிகர் சத்யராஜ் மற்றும் பலர் நடித்து உள்ள்னர். தமன் இசையமைக்கும் பிரின்ஸ் படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்தப்படத்தின் இயக்குநர் அனுதீப் பிரின்ஸ் பிரின்ஸ் திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாகும் என்று கூறியுள்ளார். 




இதனிடையே  ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநரான ரவிக்குமார் இயக்கத்தில்  ‘அயலான்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. ரகுல் ப்ரீத்திசிங், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.