'பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது அந்தப் படத்தின் கதைக்களம் மற்றும் விஜய்யின் கதாப்பாத்திரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.


நெல்சன்  திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் பீஸ்ட். விஜய்யின் 65-வது திரைப்படம் இது.  இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் கடந்த மாதம் விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி வெளியானது. இப்படத்தில் தளபதி விஜய் ஒரு புதிய அவதாரத்தில் காணப்படுவார் என்று படக் குழுவினர் தெரிவித்திருந்தனர். இந்தப் படத்தின் இடைவிடாமல், சென்னை அருகே உள்ள ஸ்ரீ கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. ஒரு பிரமாண்டமான மால் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அந்த மாலில், படத்தின் வில்லன்களில் ஒருவரான ஷைன் டாம் சாக்கோ, பொதுமக்கள், கடைக்காரர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்ததாகவும், ஆபத்தில் இருக்கும் அவர்களை விஜய்  மீட்பது போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Thala 61 Music Director: ‘தல 61’ படத்தின் இசையமைப்பாளர் இவரா? சமூகவலைதளங்களில் வைரலாகும் ட்வீட்..!


 படத்தின் விஜய் ஒரு சிறப்பு ஏஜெண்டாக நடிப்பதாக கூறப்படுகிறது. அதாவது, ஜேம்ஸ்பாண்ட்போல வைத்துக்கொள்ளலாம். சென்னையில் படப்பிடிப்பை முடித்த பிறகு, படக்குழு ரஷ்யாவிற்கு பறந்து செல்கிறது. உள்ளூர் வில்லன்களிடம் சண்டையிட்ட விஜய், அங்கு சர்வதேச வில்லங்களிடம் சண்டையிட உள்ளார். நவம்பர் மாதம் ரசிகர்களுக்காக தீபாவளி விருந்தாக இந்த படத்தின் ஒரு பாடல் எதிர்பார்க்கப்படுகிறது.


பீஸ்ட் படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடைபெற்றபோது, கொரோனா இரண்டாவது அலையால் படக்குழு மீண்டும் நாடு திரும்பியது. மேலும், படத்தின் ஹீரோயின் பூஜா ஹெக்டேவிற்கு கொரோனா பாதிப்பு போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்டது குறிப்பிடத்தக்கது.




சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தில் பூஜா ஹெக்டே விஜய்யுடன் ஜோடியாக நடிக்கிறார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு கோலிவுட் பக்கம் பூஜா ஹெக்டே திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் யோகி பாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கடந்த வாரம், ‘பீஸ்ட்’ படத்தில் நடிக்கவிருக்கும் மேலும் சில நடிகர்கள் குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது. 






ஜூன் 22-ஆம் தேதி நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு,  இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான சில நிமிடங்களில் சமூக வலைதளத்தில் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.


Sivakarthikeyan in Beast: பீஸ்ட் படத்தின் வேற லெவல் அப்டேட்! - விஜயுடன் கை கோர்க்கும் சிவகார்த்திகேயன் !