Leo2 Shoot: லியோ படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த காஷ்மீர் அரசுக்கு நன்றி தெரிவித்த படக்குழு, எதிர்கால திட்டத்திற்கு காஷ்மீர் ஒரு பகுதியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. இதனால், லியோ 2 படமாக்க திட்டமா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

 

கடந்த அக்டோபர் மாதம் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் விஜய் நடித்த லியோ படம் வெளியானது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் தயாரிப்பில் வெளிவந்த லியோ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் என பலர் நடித்திருந்தனர். படம் அறிவிக்கப்பட்டதில் இருந்து ரிலீசானது வரை பல்வேறு சர்ச்சைகள் எழுதாலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலை வாரி குவித்தது லியோ படம். 

 

லியோ படத்தின் பெரும்பலான காட்சிகள் ஜம்மு காஷ்மீரில் படமாக்கப்பட்டிருந்தது. இதனால், லியோ படத்தை காஷ்மீரில் படமாக்க அனுமதி அளித்த அப்பகுதி அரசு நிர்வாகத்திற்கும் நன்றி கூறி படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “காஷ்மீரில் லியோ படத்தை ஒத்துழைப்பு அளித்த ஜம்மு காஷ்மீர் அரசு, அதன் ஆளுநர் மனோஜ் சின்ஹா, தகவல் மற்றும் சுற்றுலாத்துறை என பாதுகாப்பு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.





காஷ்மீர் எப்போதும் எங்களின் எதிர்கால திட்டங்களின் ஒரு பகுதியாக இருக்கும். படப்பிடிப்பை சிரமமின்றி நடத்த உதவி செய்த அனைவருக்கும் பாராட்டுகள்” என கூறியுள்ளது. எதிர்கால திட்டத்தில் ஒரு பகுதியாக காஷ்மீர் இருக்கும் என செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தெரிவித்துள்ளதால், லியோ பாகம் 2 எடுக்கப்படுமா என்ற கேள்வியை ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.