'தி பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' திரைப்படத்தில் ஜேக் ஸ்பேரோவாக மீண்டும் ஜானி டெப் நடிக்கிறார் என்ற வதந்திகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
வெளியாகியுள்ள தகவல்களின் படி, டிஸ்னி நிறுவனத்தால் தயாரிக்கப்படும் எந்த திரைப்படத்திலும் ஜானி நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் ஆறாம் பாகத்தை டிஸ்னி இடைநிறுத்தியதுதான் என்று கூறப்படுகிறது.
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப், உலகப் புகழ் பெற்ற படமான பைரைட்ஸ் ஆப் தி கரீபியன் படத்தின் மூலம் உலகப் புகழ் பெற்றார். கடந்த சில ஆண்டுகளாக அவரது மனைவி ஆம்பர் ஹெர்ட் அவர் மீது வழக்கு தொடுத்ததால், ஜானியிடம் இருந்த பட வாய்ப்புகளும் கை நழுவிப்போனது. சில மாதங்களுக்கு முன் இவர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளில் தீர்ப்பு இவருக்கு சாதகமாக வந்ததால், இவர் மீண்டும் நடிப்பார் என, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ஜானி டெப் மீண்டும் கேப்டன் ஜேக் ஸ்பேரோவாக நடிக்க உள்ளார் என்றும் உருவாக உள்ள இந்த திரைப்படத்திற்கு 'ஏ டே அட் ஸீ' என்று பெயரிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்க இருப்பதாகவும், படத்தின் வேலைப்பாடுகள் முதற்கட்ட நிலையில் இருப்பதாகவும், இயக்குனர் யாரும் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் மீண்டும் ஜானி டெப்பை கேப்டன் ஜேக் ஆக பார்ப்பதில் உற்சாகமாய் இருந்தனர். அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில், ஜானி டெப் மீண்டும் ஜாக் ஸ்பேரோவாக வரப்போவதில்லை என்ற புதிய தகவல் இன்று வெளியாகி உள்ளது.
டிஸ்னியின் மிக பிரம்மாண்ட தயாரிப்புகளில் ஒன்று 'பைரைட்ஸ் ஆஃப் தி கரீபியன்'. இந்த படத்தின் ஒவ்வொரு கதாபாத்திடத்துக்கும் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதிலும் ஜானி டெப் நடித்த கேப்டன் ’ஜேக் ஸ்பேரோ’ கதாப்பாத்திரத்திற்கு உலகம் முழுவதும் உள்ள சிறு குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரும் ரசிகர்களாக உள்ளனர்.
இதுவரை மொத்தம் ஐந்து பாகங்கள் வெளிவந்துள்ள நிலையில், ஆறாவது பாகத்திற்காக உலக சினிமா வட்டாரமே காத்திருக்கிறது. ஆனால் ஆறாம் பாகத்தில் நடிக்கவிருந்த ஜானி டெப்புக்கு அந்த வாய்ப்பு பறிக்கப்பட்டது எனச் சொல்லலாம். அதாவது, 2018-ல் பத்திரிகை ஒன்றில் ஆம்பர் ஹெர்ட் ஜானி தீப் பற்றி எழுதியது பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்தது. இதனால் அடுத்த பாகம் ஜானி தீப் நடிப்பை மிஸ் செய்தது. தொடர்ந்து ஜானி டெப் நடிப்பதாக இருந்த 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படத்தின் ஆறாவது பாகத்தில் இருந்து, அதன் தயாரிப்பு நிறுவனமான டிஸ்னியால் நீக்கப்பட்டார். இதுமட்டுமில்லாமல், 'பேன்டஸ்டிக் பீஸ்ட்ஸ் 3' திரைப்படத்தில் இருந்தும் ஜானி நீக்கப்பட ஆம்பர் ஹெர்டின் கட்டுரை காரணமாக இருந்தது. நீதிமன்றத்தில், படங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கையைவிட்டுப்போக, ஆம்பர்தான் காரணம் என வாதாடினர் ஜானி தரப்பு. இப்போது தீர்ப்புக்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
உலகமே எதிர் பார்க்கும் பைரைட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தின் ஆறாம் பாகத்தில் ஜானி டெப் நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, டிஷ்னி ஜானி டெப்பிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தீர்ப்புக்குப் பின்னர் அவரது ரசிகர்கள் இணையத்தில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இனி நிச்சயமாக ஜானி டெப் ஆறாவது பாகத்தில் நடிப்பார் எனவும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ஆனால் வழக்கு நடந்தபோது, ”இனி 300 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பளமாக கொடுத்தாலும் டிஸ்னியின் படங்களில் நடிக்க மாட்டேன் என ஜானி டெப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.