நல்ல நேரம்:


காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5 மணி வரை


கெளரி நல்ல நேரம்:


காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை


இரவு 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை


இராகு:


மதியம் 3 மணி முதல் மதியம் 4.30 மணி வரை


குளிகை:


மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


எமகண்டம்:


காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை


சூலம் - வடக்கு


மேஷம்


இன்று நீண்டதூர பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிட்டும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சம்பவங்கள் அரங்கேறலாம். பணிபுரியும் இடங்களில் மகிழ்ச்சி கிட்டும். அன்பானவர்களின் சந்திப்பு நிகழும்


ரிஷபம்


இந்த நாள் மனதில் நிம்மதி ஏற்படும். நீண்டநாள் நீடித்து வந்த மனக்குழப்பம் அகலும். சொத்து பிரச்சினை மற்றும் வீட்டுக்குள் நீடித்து வந்த பிரச்சினை சுமூகமாக முடியும். அக்கம்பக்கத்தினர் இடையேயான மனக்கசப்பு அகலும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 


மிதுனம்


இந்த நாள் உங்களுக்கு அருமையான நாள் ஆகும். தொழிலில் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கும். இதனால் பணிபுரியும் இடம் மற்றும் வீட்டில் உங்களது புகழ் அதிகரிக்கும். நீண்டநாள் செய்ய நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நீடித்து வந்த பிரச்சினை முடிவுக்கு வரும். 


கடகம்


இந்த நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாள் ஆகும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்களின் மூலம் நன்மை ஏற்படும். சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.


சிம்மம்


இந்த நாள் உங்களுக்கு லாபகரமான நாள் ஆகும். ஆடம்பர பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் புதுவிதமான சூழல் உண்டாகும். மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் எண்ணியதை நிறைவேற்றி கொள்வீர்கள். சுகம் நிறைந்த நாள்.


கன்னி


இந்த நாள் அதீத உழைப்பை வெளிப்படுத்துவீர்கள்.  சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். நட்பு நிறைந்த நாள்.


துலாம்


சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி ஏற்படும். இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.


விருச்சிகம்


வியாபார பணிகளில் மாற்றமான சூழல் அமையும். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் மேம்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். கடன் நிமிர்த்தமான பிரச்சனைகள் குறையும். புகழ் நிறைந்த நாள்.


தனுசு


உத்தியோகத்தில் திறமைக்கு ஏற்ப உயர்வு உண்டாகும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத தனவரவின் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.


மகரம்


எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். பெரியோர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். மற்றவர்களின் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. திடீர் பயணங்களின் மூலம் உடலில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.


கும்பம்


மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தம் சாதகமாக அமையும். வெளிவட்டாரங்களில் இருந்து புதுவிதமான அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். நிறைவான நாள்.


மீனம்


மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் சாதகமாக அமையும். கொடுக்கல், வாங்கலில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கடன் நிமிர்த்தமான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். விரயம் நிறைந்த நாள்.