தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் , இயக்குநர்களின் அன்பையும் , ஆதரவையும் பெற்ற தயாரிப்பாளருள் ஒருவர் ஐசரி கணேஷ.  இதுவரையில் 15 க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார் . ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார். தற்போது சிம்பு , கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகி  வரும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை ஐசரி கணேஷ்தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வடிவேலும் தற்போது மீண்டும் சினிமா துறையில் கம் - பேக் கொடுப்பதில் மிக முக்கிய பங்கு ஐசரி கணேஷுடையது என்றால் மிகையில்லை.




இது குறித்து சித்ரா லக்‌ஷமணுடன் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார் ஐசரி கணேஷ் , அதில்” வடிவேலு ஒரு மாபெரும் காமெடியன்.அவர மாதிரியான ஒரு நடிகரை பார்க்கவே முடியாது.யாரா இருந்தாலும் அவருடைய ரசிகர்களாக இருப்பாங்க. அந்த ரசிகர்கள்ல நானும் ஒருவன். ஒரு நிகழ்ச்சியில் நான் வடிவேலுவை சந்தித்தேன்.அப்போது நலம் விசாரித்தேன். அதன் பிறகு என்ன அண்ணே ஆச்சு , திரைப்படங்கள்ல ஏன் நடிக்கிறது இல்லை என கேட்டேன்.


அவர் இல்லை தம்பி  மூன்று வருடங்களா படங்கள்ல நடிக்கல . அப்போதான் என்னிடம் பிரச்சனை என்னனு சொன்னாரு. தயாரிப்பாளர் சங்கத்துல என் மேல புகார் கொடுத்திருக்காங்க. ரெட் கார்ட் கொடுத்திருக்காங்க.  லைகா நிறுவனம் இயக்குநர் ஷங்கர் மேல புகார் கொடுத்திருக்காங்க.  ஷங்கர் என் மேல புகார் கொடுத்திருக்காரு. எங்க மூன்று பேருக்கும் இருக்கும் பிரச்சனையில ,( இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி )படம் நிற்குது. நானும் நடிக்காம மூன்று வருடங்களா வீட்டிலேயே உட்கார்ந்திருக்கிறேன். ரொம்ப போர் அடிக்குது என கூறினார். உடனே நான் அண்ணே நீங்கல்லாம் நடிக்காம இருக்கவே கூடாது அண்ணே. நான் என்ன என்னால பண்ண முடியுமோ பார்க்கிறேன் என்றேன்.


முதலில் ஷங்கர் சாரை பார்த்தேன். என்னுடைய நண்பர் , அவர் சொன்னதாலதான் 2.0 படத்துல 15 வருடங்களுக்கு பிறகு நடித்தேன். அவர் என்னுடைய பக்கத்து வீடு. அவரை போய் சந்தித்தேன். அவர் எனக்கு மேல வடிவேலுவுடைய ரசிகர். அவர் நடிக்கனும் , எனக்கும் அவருக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது.லைகா என்னை புகார் கொடுக்க சொன்னாங்க , நான் கொடுத்தேன் என்றார் சங்கர். அதன் பிறகு லைகா நிறுவனரை வரவழைத்து பேசி , எல்லோருமாக ஒரு முடிவுக்கு வந்தோம். லைகா செட்டில்மெண்டிற்கு வந்தாங்க. அந்த சமயத்துலதான் இந்தியன் 2 பிரச்சனையும் இருந்தது. அதனால கொஞ்சம் பொறுமையக இருக்க சொன்னாங்க. வடிவேலுவும் ஒரு தொகையை லைகா நிறுவனத்திற்கு கொடுக்க ஒப்புக்கொண்டார் . லைகா நிறுவனத்திற்கான நஷ்டத்தை தான் ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு ஷங்கர் சாரும் ரெட் கார்டை நீக்கிக்கொள்வதாக தெரிவித்தார். “ என தெரிவித்துள்ளார். 




வடிவேலும் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் முழு வீச்சில் நடித்து வருகிறார்.  இந்தியன் 2 படத்தின் பிரச்சனையும் முடிவுக்கு வந்துவிட்டது. இதற்கிடையில் கிடப்பில் போடப்பட்ட இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி திரைப்படம் மீண்டும் தொடங்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.