சமந்தா ஃபாலோவர்கள் எண்ணிக்கை!
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்து நடித்தும் ஹிட் படங்களைக் கொடுத்தும் வருகிறார். பெரிய திரையில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் மிக ஆக்டிவ்வாக இருப்பவர் நடிகை சமந்தா. நடிகை சமந்தாவிற்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 2 கோடி ஃபாலோவர்களுக்கும் மேல் உள்ளனர். தனது அன்றாட வாழ்வின் சில சுவாரசியங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் வழக்கம் கொண்டவர் சமந்தா.
ஹேக் செய்யப்பட்டதா?
இந்நிலையில் நேற்றைய முன்தினம் சமந்தாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வேறு ஒரு நபரின் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்று பதிவிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்த ரசிகர்கள் சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த செய்தி வைரலாகியது.ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படும் தகவல் உண்மையா? அல்ல வெறும் வதந்தியா? என ரசிகர்கள் அனைவரும் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் சமந்தா தரப்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சமந்தா தரப்பு விளக்கம்!
நடிகை சமந்தாவின் மேனேஜர் ஷேஷாங்கா பினேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இதற்கு விளக்கம் தெரிவித்தார். தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேறு ஒருவரின் பதிவு தவறுதலாக பதிவிடப்பட்டது எனவும், இது குறித்து தங்கள் தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட தாகவும், தற்போது அந்த தொழில்நுட்ப பழுது சரி செய்யப்பட்டு சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் இயல்புநிலைக்கு திரும்பிவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், இதனால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு மன்னிப்பு கோரினார். இந்த பதிவை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மறுபதிவும் செய்துள்ளார். இதன்மூலம் சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டதா என்ற ரசிகர்களின் சந்தேகம் தீர்ந்தது.
நடிகை சமந்தா தற்போது ’குஷி’ படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் டிசம்பர் 23-ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. சாகுந்தலம், யசோதா, ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தா இன்ஸ்ட்டா பக்கத்தில் நடந்த இந்த குளறுபடி, ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்திருப்பது, ரசிகர்களின் குழப்பத்தை தீர்த்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்