பல்வேறு உணவகங்கள் மற்றும் உணவுகள் குறித்த விமர்சனங்களை தனது youtube சேனல் மூலம் பதிவு செய்து பிரபலமானவர் இர்ஃபான். இர்ஃபானின் "இஃப்ரான் வியூஸ்" என்ற youtube சேனலில் மட்டும், சுமார் 44 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பின் தொடர்பவர்களாக உள்ளனர். அவ்வப்பொழுது இர்பான் சர்ச்சைகளில் சிக்குவது இயல்பான ஒன்றாகவே இருந்து வருகிறது. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும் இர்பானின் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இஃப்ரான் கார் விபத்து
இந்தநிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி இருப்பானின் கார் மறைமலைநகர் அருகே விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் மறைமலை நகர் அருகே சாலையை கடக்க முயற்சி செய்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இர்ஃபானின் காரை இர்ஃபான் ஒட்டி வரவில்லை எனவும், அவரது உறவினர் அசாருதீன் என்பவர் ஓட்டி வந்ததாகவும், இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
பிரியாணி மேன் vs இர்ஃபான்
சமீபத்தில் இர்பான் கார் விபத்தை பற்றி பிரியாணி மேன் என்ற youtube சேனலில், அபிஷேக் என்பவர் விமர்சனம் செய்திருந்தார். இந்தநிலையில் அந்த வீடியோவிற்கு இர்பான் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பதிலளித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இந்தநிலையில், வழக்கின் நிலை என்ன என்பது குறித்தும், முதல் தகவல் அறிக்கையில் என்ன இருந்தது என்பது குறித்தும் இந்த செய்தியில் நாம் பார்க்கலாம்.
விபத்து தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்றது தொடர்ந்து, இது குறித்த போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விபத்து நடைபெற்ற இடம், ஜிஎஸ்டி சாலையில் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் எதிரே இந்த விபத்து நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்த புகாரை, உயிரிழந்த பத்மாவதியின் மகன் பிரகாஷ் என்பவர் கொடுத்துள்ளார்.
எஃப்.ஐ,ஆர்- இல் இருப்பது என்ன ?
முதல் தகவல் அறிக்கையில், 25/5/23 ஆம் தேதி இரவு சுமார் 8.43 மணியளவில் பொத்தேரியை சேர்ந்த செந்தமிழ் செல்வன் எஎன்பவர் எனக்கு போன் செய்து மறைமலை நகர் நகராட்சி அருகே வந்து கொண்டிருந்த போது, தங்களுக்கு பின்னால் செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் நோக்கி வந்த பென்ஸ் காரை ஓட்டி வந்த ஓட்டுநர் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஆரன் அடிக்காமலும், லைட்டை "டிம் டிப் " செய்யாமலும் தாறுமறாக ஓட்டி வந்து, எங்களுக்கு முன்னே ரோட்டின் இடது புற ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த என் அம்மா பத்மாவதி மீது மோதி தூக்கி ஏறியப்பட்டு, பலத்த இரந்த காயத்துடன் எலும்பு முறிவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே, இறந்து விட்டதாகவும் எனக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, என் அம்மாயின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் கூறியதை தொடர்ந்து பின் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் பற்றி விசாரித்த பொழுது அவர் பெயர் சித்தாலபாக்கத்தை சேர்ந்த முகமது அசாருதின் என்று தெரிய வந்தது.
தொடர்ந்து பின் நானும் என் மாமா சந்தோஷ்குமார் என் நண்பர் மோகனகண்ணன் ஆகியோர் புறப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்று சவகிடங்கில் வைக்கப்பட்டிருந்த என் அம்மாவின் பத்மாவதி உடலை பார்த்துவிட்டு பின் காவல் நிலையம் வந்து நடந்த சம்பவம் பற்றி புகார் கொடுத்துள்ளேன். எனவே அதிவேகமாகவும் நாறுமாறாக காரை ஓட்டி வந்து ரோட்டின் இடது புற ஓரமாக நடந்து கொண்டிருந்த என அம்மா பத்மாவதி மீது மோதி விபத்து ஏற்படுத்தி அவரின் அகாலமரணத்திற்கு காரணமாக இருந்த மேற்படி கார் ஓட்டுநர் அசாருதின் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன், புகார் மனு தான் எஃப்.ஐ.ஆர்.இல் உள்ளது .
இந்த வழக்கில் ஓட்டுநர் அசாருதீன் மீது 279 மனித உயிருக்கு ஆபத்து உண்டாகும் வகையில் வாகனத்தை இயக்குவது,304 (a) அஜாக்கிரதையாகச் செய்து அதனால் யாருக்காவது மரணம் ஏற்படுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.