இயக்குநர் பார்த்திபன் ‘இரவின் நிழல்’ படத்தை பிரோமோட் செய்யும் விதமாக, ட்விட்டுக்கு ட்ரீட் என்ற கான்செப்ட்டை வெளியிட்டு இருக்கிறார். அது என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
ட்விட்டுக்கு ட்ரீட் என்ற தலைப்பில் பார்த்திபன் பேசி வெளியாகி இருக்கும் அந்த ஆடியோவில், “ என்ன பர்சனலா சந்திச்சு பேசுணும்னு ஆசைப்பட்டா உடனடியா, இரவின் நிழல் படத்தை 5 பேரோட பார்த்திட்டு அந்த 5 டிக்கெட்டு, உங்க போட்டோ.. படத்தை பத்தின உங்களோட ட்விட்.. அது எல்லாத்தையும் intweetkutreat@gmail.com க்கு அனுப்புங்க..
ட்ரீட் என்ன அப்படின்னா ஒவ்வொரு ஊர்ல இருந்தும் 5 பேர செல்கட் பண்ணி அவங்க எல்லாரையும் சென்னைக்கு வரவழைச்சு ஒரு நாள் இரவு ஒரு டின்னர், செல்பி, கலந்துரையாடல் அப்படின்னு என்னால முடிஞ்ச குட்டி குட்டி சந்தோஷங்களை கொடுக்கப்போறேன். இந்த வெற்றியை கொண்டாட நினைக்கிறேன். தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று பேசியிருக்கிறார்.
முன்னதாக, தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் இயக்குநர் பார்த்திபனும் ஒருவர். இவர் தற்போது எழுதி இயக்கி, நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம் தான் “ இரவின் நிழல்”. உலகிலேயே முதல், “நான் லீனியர் சிங்கிள் ஷாட்” படமாக உருவான இந்தப்படம் கடந்த ஜூலை 15 ஆம் திரையரங்குளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் பார்த்திபனின் வித்தியாசமான முயற்சியை சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.
இந்த படத்தில் நடிகைகள் பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதனிடையே பார்த்திபனிடம் உதவி இயக்குநராக வேலை செய்ய வந்த பிரிகிடாவுக்கு இரவின் நிழலில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருந்தார். இந்தப்படத்தில் நிர்வாண காட்சி ஒன்றிலும் அவர் நடித்திருந்தார். அண்மையில் இவர் சேரி குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பின்னர் அதற்காக அவர் மன்னிப்பு கேட்டார்.