நடிகர் ஜெயம் ரவி - நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
பொன்னியின் செல்வன் படத்துக்குப் பிறகு பான் இந்தியா ரசிகர்களைக் கவர்ந்துள்ள நடிகர் ஜெயம் ரவி தன் அடுத்தடுத்த படங்களை கவனமுடன் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இதனிடையே என்றென்றும் புன்னகை,மனிதன் படங்களின் இயக்குநர் ஐ.அஹமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனமீர்த்துள்ளது. தனி ஒருவன் பட வெற்றிக்குப் பிறகு ஜெயம் ரவி - நயன்தாரா வெற்றிக்கூட்டணி இந்தப் படத்தில் மீண்டும் ஒன்றிணைகிறது.
யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கும் நிலையில் சமீபத்தில் தான் படப்பிடிப்பு முற்றிலுமாக நிறைவு பெற்றது.
இந்நிலையில் நேற்று இறைவன் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் கவனமீர்த்து வருகிறது.
இறைவன் மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஜெயம் ரவி தன் இன்ஸ்டா பக்கத்தில் தன் இரு மகன்களுடன் பகிர்ந்திருந்த குடும்பப் படமும் கவனம் ஈர்த்து லைக்ஸ் அள்ளியது. ஜெயம் ரவி நடிப்பில் இந்த ஆண்டு வெளிவரும் ’பொன்னியின் செல்வன் 2’ படம் பெரும் எதிர்பார்ப்புகளைக் கிளப்பியுள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் 450 கோடிக்கு மேல் வாரியெடுத்து வசூல் சாதனை புரிந்த நிலையில், இரண்டாம் பாகம் அந்த சாதனையை முறியடிக்குமா என எதிர்பார்த்து காத்துள்ளனர் ரசிகர்கள்.