பொங்கல் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு வடிவில் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் இது லோஹிரி என்கிற பெயரில் அனுசரிக்கப்படுகிறது. இந்த குளிர்காலப் பண்டிகையின் முக்கியப் பகுதி மக்கள் அந்நாளில் தங்களுக்குப் பிடித்த சுவையான தின்பண்டங்களை உண்டு மகிழ்வார்கள். அந்த வகையில் எள், பாப்கார்ன் ஆகியவற்றுக்கு ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு என்றாலும் வேர்க்கடலை வெல்லத்துக்கும் ஒரு தனிப்பட்டாளம் இருக்கிறது. பல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளில் வெல்லம் ஒன்று என்றாலும், வேர்க்கடலையில் கொழுப்பு, புரதம் மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்கு தேவையான பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வெல்லத்தில் கால்சியம், துத்தநாகம், தாமிரம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட வைட்டமின் பி மற்றும் தாதுக்கள் சிறிய அளவில் உள்ளன.
இதனை சேர்த்து உண்பதால் ஏற்படும் நன்மைகள்...
குளிர்காலத்தில் நமக்கு அடிக்கடி பசி எடுக்கிறது. நிலக்கடலையுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இதனை சாப்பிடுவதால் பசி உடனடியாக அடங்குகிறது...
ஆரோக்கியமான சர்க்கரை மாற்றாக அறியப்படும் வெல்லம், நெய்யுடன் உட்கொள்ளும்போது, சிறந்த செரிமானத்திற்கு உதவுவதோடு, மலச்சிக்கலையும் குறைக்கும்.
மாதவிடாய் வயிற்றுவலியுடன் போராடுகிறீர்களா? வெல்லம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். PCOD உள்ள பெண்களுக்கும் இது நிச்சயமாக உதவியாக இருக்கும்.
- வெல்லம் பெருஞ்சீரகத்துடன் கலந்து உட்கொள்ளும்போது வாய் துர்நாற்றத்திலிருந்து விடுபட உதவும். இது பற்களில் பிளேக் உருவாவதையும் குறைக்கும், எனவே இது வாய் ஆரோக்கியத்திற்கு நல்லது.
வெந்தய விதைகளுடன் வெல்லத்தை உட்கொண்டால், அது உங்கள் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது உங்கள் மேனியை வலுவாகவும் பளபளப்பாகவும் மாற்றும், முன்கூட்டிய நரைப்பதைத் தடுக்கும்.
வேர்க்கடலையைப் பற்றி பேசுகையில், அவற்றை பச்சையாகவோ அல்லது பீநட் பட்டர் போன்ற வடிவங்களில் உட்கொள்ளலாம். வேர்க்கடலை உடல் எடையை குறைக்க உதவுகிறது, இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும் அவை நீரிழிவு, பாலிசிஸ்டிக் ஓவேரியன் நோய் (PCOD) போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நன்மை பயக்கும்.
வேர்க்கடலை உட்கொள்வதன் நன்மைகள்:
வேர்க்கடலையில் பயோட்டின், வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் பி6 போன்ற சேர்மங்கள் உள்ளன, அவை வயிறு வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன, அத்துடன் மாதவிடாயினால் ஏற்படும் எரிச்சலையும் இது கட்டுப்படுத்த உதவுகிறது.வேர்க்கடலையை உண்பது முகப்பரு மற்றும் முடி உதிர்வைத் தடுக்கலாம் என்பது பலருக்குத் தெரியாது.இது ஒழுங்கற்ற மாதவிடாய், முகப்பரு மற்றும் முகத்தில் முடி வளர்வது போன்ற ஹார்மோன் கோளாறுகளை கட்டுப்படுத்த உதவுகிறது.
வேர்க்கடலையில் அதிக கொழுப்பு மற்றும் கலோரி உள்ளடக்கம் உள்ளது, ஆனால் அவை வியக்கத்தக்க வகையில் எடை இழப்பை ஊக்குவிக்கும். ஏனெனில் வேர்க்கடலையில் உள்ள அதிக புரத அளவுகள் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு உடலின் ஆற்றலை தகுந்தபடி செயல்படுத்த உதவுகிறது. அதில் உள்ள நார்சத்து உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
வேர்க்கடலையில் தாமிரம், மாங்கனீஸ், மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது, இது சிறந்த கர்ப்பகால உணவாகக் கருதப்படுகிறது.
டைப்-2 நீரிழிவு நோய், அல்சைமர் நோய், பார்கின்சன் நோய் மற்றும் புற்றுநோய் கூட ஏதோ ஒரு வகையில் அழற்சி நிலைதான். வேர்க்கடலையில் உள்ள ரெஸ்வெராட்ரோல் இவற்றைக் கட்டுப்படுத்த உதவுகிறது.