Ennama Kannu: ரஜினி நடித்த மிஸ்டர் பாரத் படத்தில் என்னமா கண்ணு டயலாக் வந்ததற்கான காரணம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

1986ம் ஆண்டு வெளியான படம் மிஸ்டர் பாரத். சத்யராஜ் மற்றும் ரஜினி காம்போவில் உருவான மிஸ்டர் பாரத் ரசிகர்களின் பேவரைட் படங்களில் ஒன்று. அம்மா சென்டிமெண்டில் உருவான இந்த படத்தில், சத்யராஜ் வில்லனாகவும், அவரை பழிவாங்கும் ஹீரோவாகவும் ரஜினி நடித்திருப்பார். 

 

வழக்கமான பாணியில் இல்லாமல், தந்தையையே பழிவாங்கும் கேரக்டரில் ரஜினி நடித்துள்ளார். தனது அம்மாவை ஏமாற்றி கர்ப்பமாக்கியதால் தந்தையான சத்யராஜை பழிவாங்க துடிப்பார் ரஜினி. தொழிலதிபராக இருக்கும் சத்யராஜை, தொழில்ரீதியில் பழிவாங்கும் ரஜினி, ஏட்டிக்கு போட்டியாய் நடித்திருப்பார். இதில் சத்யராஜும், ரஜினியும் சந்தித்து பேசிக் கொள்ளும்போது ”என்னம்மா கண்ணு” என்று ரஜினியை பார்த்து சத்தியராஜ் கேட்பார். அந்த டயலாக் பெரிதாக ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் என்னமா கண்ணு டயலாக் எப்படி வந்தது என்ற தகவல் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 

 

ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தின் வாரிசான அருணா குகன் எனப்வர் பகிர்ந்த தகவலில். “ தனது தத்தாவான எம். சரவணன், ஆனந்த் தியேட்டர் ஓனர் உமாபதியை என்னம்மா கண்ணு என்று தான் அழைப்பார். அப்படி அழைப்பதை படத்தில் வைத்தால் எப்படி இருக்கும் என்று எனது தாத்தா கேட்டுளார். அதை தான் மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினியை பார்த்து என்னம்மா கண்ணு சௌக்கியமா என்று சத்யராஜ் கேட்பார்” என கூறியுள்ளார். 

 

”என்னம்மா கண்ணு சௌக்கியமா” என்ற டயலாக் இடம்பெற்ற மிஸ்டர் பாரத் பாடலும் ரசிகர்களை கவந்தது. இதே பாணியிலான பாடல் தனுஷ் படத்தின் திருவிளையாடல் படத்தில் இடம்பெற்றிருந்தது. அதில் பிரகாஷ் ராஜூன், தனுஷும், ரஜினி -சத்யராஜ் போல் என்னம்மா கண்ணு பாடலை பாடி நடித்திருப்பார்கள்.  

 

எம்.சரவணன் தயாரித்த மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினி, சத்யராஜூடன் இணைந்து அம்பிகா, வடிவுக்கரசி, விசு, கவுண்டமணி, ரகுவரன், எஸ்.வி.சேகர் என பலர் நடித்துள்ளனர்.