Parking OTT Release: ஹரீஷ் கல்யாண் நடித்துள்ள பார்க்கிங் படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கி இருக்கும் படம் பார்க்கிங். இதை சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து இந்துஜா, எம்.எஸ். பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிராத்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் பார்க்கிங் படத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்த நிலையில், ஜிஜூ சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வரும் ஹரிஷ் கல்யாண் தனது மனைவி இந்துஜாவுடன் சேர்ந்து புதிய வீட்டிற்கு செல்கிறார். அங்கு கீழ் தளத்தில் எம்.எஸ். பாஸ்கர் வாடகைக்கு உள்ளார். மனைவிக்காக ஹரிஷ் கார் வாங்கி கீழ் தளத்தில் நிறுத்துகிறார். அதனால், ஹரிஷ் கல்யாணுக்கும், கீழ் தளத்தில் இருக்கும் எம்.எஸ். பாஸ்கருக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. அதில் யார் வாகனத்தை பார்க்கிங் செய்வது என்ற சண்டையை கதையாகக் கொண்டு பாக்கிங் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய பார்க்கிங் பிரச்னையை வைத்துக்கொண்டு முழு நீள திரைப்படமாக இருக்கும் பார்க்கிங் படம் கடந்த 30ம் தேதி திரைக்கு வந்து வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் பார்க்கிங் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி பார்க்கிங் படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வரும் 30ம் தேதி வெளியாகும் என படக்குழு கூறியுள்ளது. திரைக்கு சென்று பார்க்கிங் படத்தை பார்க்காதவர்கள் ஓடிடி தளத்தில் பார்த்து ரசிக்கலாம்.
மேலும் படிக்க: Thillu Mullu Chandrasekaran: ரஜினியுடன் தில்லுமுல்லு படத்தில் கலக்கிய குழந்தை நட்சத்திரம்.. நடிகர் சந்திரசேகரன் மறைவு!