Watch Video| சானியா மிர்ஸாவின் ஐஃபோன் ரீல்ஸ்.. ஹிட்டடிக்கும் வீடியோ கண்டெண்ட்..

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தளத்தில் சானியா மிர்சாவின் வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது.

Continues below advertisement

சமூக வலைதளங்களில் எப்போதும் ஒரு விதமான புதிய விஷயங்கள் ட்ரெண்டாகும் போது அவை பிரபலங்களின் கண்ணில் பட்டால் வைரல் தான். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது மீண்டும் நடைபெற்றுள்ளது. அதாவது ஐபோன் லாக் தொடர்பான இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஒன்று தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அந்த ரீல்ஸை பலரும் செய்து வருகின்றனர். 

Continues below advertisement

இந்தச் சூழலில் அந்த ரீல்ஸை மாதூரி திக்சித், சானியா மிர்சா, மும்முன் தத்தா போன்ற பிரபலங்கள் செய்து வருகின்றனர். இதனால் அந்த ஐபோன் ரீல்ஸ் வேகமாக ட்ரெண்டாகி வருகிறது. இந்த ரீல்ஸ் தொடர்பான வீடியோவை மாதூரி திக்சித் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை தற்போது வரை 38 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். 

 

இதேபோன்ற இந்த ரீல்ஸ் தொடர்பான வீடியோவை சானியா மிர்சாவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவருடைய வீடியோ சுமார் 1 லட்சம் பேருக்கு மேல் பார்த்து லைக் செய்துள்ளனர். அந்த வீடியோவும் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. 

 

மேலும் படிக்க: டைம்ஸ் சதுக்கம் முதல் ட்விட்டர் வரை : சந்தோஷமா இருக்குய்யா.. நன்றி சொன்ன இசையின் ராஜா

Continues below advertisement
Sponsored Links by Taboola