பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் 40வது பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்ட கணவர் நிக்கி ஜோன்ஸ். 'Jewel of July' எனவும் செல்லப்பெயர் வைத்துள்ளார். 


பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா.  நேற்று இவர் தனது 40ஆவது பிறந்த நாளினை தனது கணவர் நிக்கி ஜோன்ஸ் உடன் கொண்டாடினார். பிரியங்கா சோப்ரா மற்றும் நிக்கி ஜோன்ஸ் தம்பதியினர்  சமீபத்தில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டனர். தாயாக பிரியங்கா சோப்ராவின் முதல் பிறந்த நாள் இது. இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் மொக்சிகோ நகரில் உள்ள ஒரு கடற்கரையோர தனியார் விடுதியில் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மனைவி பிரியங்கா சோப்ராவினை,  'Jewel of July' என செல்லப் பெயரிட்டுள்ளார் நிக்கி ஜோன்ஸ். மேலும், 80களின் குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் எனவும் குறிப்பிடுள்ளார். இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொத்தம் நான்கு புகைப்படங்களை நிக்கி ஜோன்ஸ் வெளியிட்டுள்ளார். 






முதல் புகைப்படத்தில் பிரியங்கா சோப்ரா மற்றும் நிக்கி ஜோன்ஸ் கடற்கரையில் முத்தமிட்டுக் கொள்கின்றனர். இரண்டாவது புகைப்படத்தில் 80களின் குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என ஜோன்ஸ் வழங்கிய சிறிய பதாகையினை பிரியங்கா ஏந்தியபடி இருக்கிறார். மூன்றாவது புகைப்படத்தில் Priyanka The Jewel of July என்ற பேனரை ஏந்தியபடி நிக்கி ஜோன்ஸ் நின்று கொண்டு இருக்கிறார். நான்காவது புகைப்படத்தில் பிரியங்கா மற்றும் ஜோன்ஸ் தம்பதியினர் கட்டிபிடித்தபடி வானவேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்களை உலகம் முழுவதும் உள்ள பிரியங்கா சோப்ரா மற்றும் நிக்கி ஜோன்ஸின் ரசிகர்களின் லைக் செய்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.  




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண