சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று வெற்றி பெற்ற நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரோபோ ஷங்கர். ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள ரோபோ ஷங்கர் சமீபத்தில் மஞ்சள் காமாலை நோய் முற்றிய நிலையில் உடல் இளைத்து ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி போய் காணப்பட்டார். பின்னர் குடும்பத்தினரின் ஆதரவோடும் மருத்துவ உதவிகளோடும் அதில் இருந்து மீண்டு தற்போது பழைய நிலைக்கு திரும்பி வருகிறார். 


 




மெல்ல மெல்ல தேறி வரும் நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா திருமணம் கடந்த வாரம் மிகவும் கோலாகலமாக, பிரம்மாண்டமாக நடைபெற்றது. ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜாவும் ஒரு நடிகையாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். பிகில், விருமன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். மேலும் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சர்வைவர்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 


இந்திரஜா ஷங்கர் தன்னுடைய முறைமாமன் கார்த்திக் என்பவரை காதலித்து வந்த நிலையில், இருவரின் திருமணம் மிகவும் பிரமாதமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. மருமகனுக்கு வரதட்சணையாக கிட்டத்தட்ட ரூ.20 லட்சம் கொடுத்துள்ளார் ரோபோ ஷங்கர் என்ற பேச்சுக்கள் அடிபடுகின்றன. சொகுசு கார், நகை என அனைவரும் வாய்பிளக்கும் அளவுக்கு மகளின் திருமணத்தை தன்னுடைய விருப்பத்தின்படி செய்து வைத்துள்ளார் ரோபோ ஷங்கர். 


இந்திரஜா ஷங்கர் - கார்த்திக் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி ட்ரெண்டாகின. இந்நிலையில் வரவேற்பு நிகழ்ச்சியில் மேடையில் ரோபோ ஷங்கர், அவரின் மனைவி, மகள், மருமகன் மற்றும் நண்பர்கள் பலரும் நடனமாடினார்கள். அப்போது மருமகன் கார்த்திக் மாமியார் பிரியங்காவை பிடித்துக் கொண்டு நடனமாடினார்.


அப்போது எதேச்சையாக பிரியங்காவின் உதட்டில் தெரியாமல் முத்தம் கொடுத்துவிட்டார். தெரியாமல் நடந்த ஒரு செயலை வைத்து “மாமியார் மருமகன் இப்படிப்பட்ட காரியத்தை செய்யலாமா ? நம்முடைய கலாச்சாரம் எதை நோக்கி பயணிக்கிறது” இப்படி பல வகையில் இந்த விஷயத்தை வேறு விதமாக திரித்து, சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் செய்யப்பட்டு வருகின்றன.



 


இந்நிலையில், இந்த போட்டோ மற்றும் வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகிறார்கள். கார்த்திக் மற்றும் ரோபோ ஷங்கர் மனைவி பிரியங்கா இருவருக்கும் இடையே அக்கா - தம்பி உறவு முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு இடையே அப்பா ரோபோ ஷங்கரும் மகள் இந்திரஜாவுக்கும் கூட இதை போல முத்தங்களை பரிமாறி கொண்ட வீடியோக்கள் கூட வைரலானது. எதிர்பாராமல் நடந்த ஒரு சம்பவம் இணையத்தில் இப்படி பேசுபொருளாகி வருகிறது.