Indian2 Glimpse: மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோவில் இறந்த விவேக், மனோலா, நெடுமுடி வேணு உள்ளிட்ட நடிகர்கள் இடம்பெற்ற காட்சிகள் கவனத்தை ஈர்த்துள்ளன. 


1996ஆம் ஆண்டு கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் வெளிவந்த இந்தியன் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இந்தியன் 2 பாகம் எப்போது எடுக்கப்படும் என்ற கேள்வியை ரசிகர்கள் முன்வைத்து வந்தனர். இந்த நிலையில் விக்ரம் படத்தை முடித்த கமல்ஹாசன் விறுவிறுப்பாக இந்தியன் 2 படத்தில் நடித்தார். 


இந்தியன் 2 படம் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் நிலையில், அதன் அறிமுக வீடியோ வெளியானது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இந்தியன் 2 அறிமுக வீடியோ வெளியானது. தமிழில் ரஜினியும், தெலுங்கில் ராஜமவுலியும், கன்னடத்தில் சுதீப்பும், இந்தியில் அமீர்கானும், மலையாளத்தில் மோகன்லாலும் இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோவை வெளியிட்டனர். 






இந்தியனுக்கு சாவே கிடையாது என்ற வசனத்துடன் இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோவில் மறைந்த விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு, மாரிமுத்து ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். பாபி சிம்ஹாவுடன் பாதுகாப்பு படை உடையில் விவேக்கும் மனோபாலாவும் லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகளாகவும் நடித்துள்ளனர். இவர்கள் மட்டுமில்லாமல் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் சித்தார்த், எதிர்மறை ரோலில் சமுத்திரக்கனி, பிரியா பவானி ஷங்கர் என ஒவ்வொருவரின் கேரக்டர்களும் படத்தின் அறிமுக வீடியோவில் கவனத்தை ஈர்த்துள்ளன. இறுதியாக ஆடம்பரமாக வரும் எஸ்.ஜே. சூர்யாவும் கவனத்தை ஈர்த்துள்ளார். 


ஷங்கர் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், விவேக், மனோபாலா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அனிருத் இசை அளித்துள்ளார். இந்தியன் 2 படம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு ரிலீசாகலாம் என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 


மேலும் படிக்க:  Vijay Political Entry: விஜய் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? விஜயின் ஜோதிட கட்டங்கள் சொல்வது என்ன?


Indian 2 An Intro: கலாய்க்கப்பட்ட கொரோனா நிகழ்வுகள்.. ஊழல் வில்லன்களை சுளுக்கு.. இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோ எப்படி?