சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் குணசேகரனையும் கதிரையும் சாப்பிடுவதற்காக நந்தினி அழைக்க செல்ல அங்கே வளவன் இருப்பதை பார்த்துவிடுகிறாள். நந்தினி அங்கே எதற்கு வந்தாள் என்பது தெரியாமல் குணசேகரனும் கதிரும் ஷாக்காகிறார்கள். கதிர் சென்று அவளை விரட்டிவிடுகிறான். புதுசா வந்து இருப்பவரையும் அழைத்து வரச் சொல்கிறாள் நந்தினி.
"அந்த ஜீவானந்தம் தரையில் சரிவதை பார்த்து என்னுடைய பொண்டாட்டி கதற வேண்டும்" என குணசேகரன் வளவனிடம் சொல்ல "நீ நினைக்குறது எல்லாம் நிச்சயம் நடக்கும்" என நம்பிக்கை கொடுக்கிறார் வளவன். ஆண்கள் அனைவரும் உட்கார்ந்து சாப்பிட பெண்கள் அவர்களுக்கு உணவை பரிமாறுகிறார்கள். அப்போது அப்பத்தா அங்கே வந்து பெண்கள் அனைவரையும் உட்கார்ந்து சாப்பிட சொல்கிறார். அதை பார்த்து காண்டாகிறார் குணசேகரன். பெண்களும் அப்பத்தா சொல்வதை கேட்டாலும் பயந்து பயந்து உட்கார ஈஸ்வரியையும் தர்ஷினியையும் சத்தம் போட்டு எழுப்பி "ஆம்பளைங்களுக்கு சமமா சாப்பிட முதல் பந்தியிலே உட்காருறீங்களா?" என சொல்ல அனைவரும் பயந்து எழுந்து விடுகிறார்கள். "அவங்க சமைக்கிற சாப்பாடு மட்டும் சாப்பிடுவீங்க ஆனா அவங்க உங்களோட உட்கார்ந்து சாப்பிட கூடாது இல்ல. இது எல்லாத்துக்கும் ஒரு முடிவு வரும். இனிமே அவங்க அடங்கி போக மாட்டாங்க. அப்ப நீங்க அவங்களை மதிச்சு தான் ஆகணும்" என அப்பத்தா சொல்ல "அதையும் பார்க்கலாம் யார் அடங்குறான்னு" என குணசேகரன் சவால் விட "பார்க்க தானே போறீங்க" என்கிறார் அப்பத்தா. அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.
"நாளைக்கு மட்டும் இல்ல பா நாளைக்கு மற்றொரு நாள்" என அப்பத்தா சொல்ல "பட்டு நாளைக்கு ஒரே நாள்" என சிரித்து கொண்டே சொல்ல அப்பத்தாவுக்கு அவர்கள் மீது டவுட் வருகிறது. இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.