இந்தியன் 2


ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், காளிதாஸ் ஜெயராம், பாபி சிம்ஹா, மறைந்த நடிகர்கள் விவேக், மாரிமுத்து, மனோபாலா, எஸ் ஜே சூர்யா என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.


ரவிவர்மன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பை கையாண்டுள்ளார்.  இந்தியன் 2 படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் மொத்தம் 7 வில்லன்களை எதிர்கொள்ள இருக்கிறார். மேலும்  இந்தப் படத்தில் நடிகர் கமலை இளைஞனாக காட்ட டீ-ஏஜிங் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் இன்ட்ரோ வீடியோவை படக்குழு வெளியிட இருப்பதாக நேற்று அறிவித்திருந்தது.


இண்ட்ரோ வீடியோவை வெளியிட்ட பிரபலங்கள்


தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் , இந்தி என பான் இந்திய பட்மாக வெளியாகும் இந்தப் படத்தின் அறிமுக வீடியோவை அந்தந்த மொழிகளில் உள்ள பிரபல நடிகர்கள் வெளியிட இருக்கிறார்கள். அதன்படி தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்தியில் அமீர் கான், தெலுங்குவில் இயக்குநர் ராஜமெளலி, கன்னடத்தில் நடிகர் கிச்சா சுதீப் மலையாளத்தில்  நடிகர் மோகன்லால் உள்ளிட்டவர்கள் இந்தப்  வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.