ஷங்கர் - கமல் கூட்டணியில் 1996ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்று வசூலை அள்ளியது. ஊழலை எதிர்க்கும் விதமாக எடுக்கப்பட்ட இந்தியன் படத்தில் இந்தியன் தாத்தாவாக வலம் வந்த கமல்ஹாசன் நடிப்பால் அசத்தினார். அடுத்த பாகம் வருமா என நீண்ட காலமாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், கண்டிப்பாக இந்தியன் 2 எடுக்கப்படும் என கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.


அதன்படி இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் பிரீத் சிங், பிரியா பவனி சங்கர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிரூத் இசை அமைக்க ரவி வர்மா மற்றும் ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கின்றனர். ரூ.250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் இந்தப் படத்தில் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


அவர் நடிக்கும் காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. முன்னதாக தென்னாப்பிரிக்காவில் படப்பிடிப்பை முடித்து கொண்ட படக்குழு, சென்னை  பன்னாட்டு விமான நிலையத்தில் படப்பிடிப்பை தொடங்கியது. இதற்காக விமான நிலைய ஆணையத்தில் ரூ.1.24 கோடி பணம் செலுத்தி படக்குழுவினர் அனுமதி பெற்றுள்ளனர்.



இம்மாதத்துடன் படப்பிடிப்பு நிறைவு பெறும் நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்தியன் 2 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியன் 2 படத்திற்கான மார்க்கெட்டிங் இப்பொழுதே தொடங்கியுள்ளது.


இந்தியன் 2 பாகத்தின் ஆடியோ ரைட்ஸை ரூ. 23 கோடிக்கு சரிகமபா நிறுவனம் பெற்றுள்ளது. அந்த வரிசையில் தற்போது டிஜிட்டல் உரிமையை ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. 220 கோடிகளுக்கு இந்தியன் 2 படத்தின் டிஜிட்டல் உரிமையை அந்நிறுவனம் வாங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.


இதன் மூலம் இந்திய சினிமாவில் அதிக விலைக்கு டிஜிட்டல் உரிமம் விற்பனையான படம் என்ற பெருமையை இந்தியன் 2 பெற்றுள்ளது. 


மேலும் படிக்க: Glimpse Of Kanguva: மிரட்டும் கிராஃபிக்ஸ்.. வித்தியாசமான லுக்கில் சூர்யா.. கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இதோ..!


Kanguva Glimpse : ஹாலிவுட்டுக்கு சவால் விடும் கங்குவா வெளியான கிளிம்ப்ஸ்.. மிரட்டும் லுக்கில் சூர்யா


HBD Suriya: ரசிகர்களின் மனதில் மின்னும் தங்கம்.. எங்கள் சிங்கம் ‘சூர்யா’வின் பிறந்தநாள் இன்று...!