indian premier league KKR vs RCB: நடப்பாண்டிற்கான 18வது ஐபிஎல் சீசன் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கப்போவது யார்? என்பதை நிரூபிக்கும் விதமாக இன்று நேருக்கு நேர் மோதுகின்றன.
மிரட்டும் மழை:
ஆனால், ரசிகர்களுக்கு வேதனை அளிக்கும் விதமாக கொல்கத்தாவில் மழை பொழிந்து வருகிறது. இதனால், இன்றைய போட்டி நடக்குமா? நடக்காதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. வானிலை ஆய்வாளர்கள் அளித்துள்ள தகவலின்படி, கொல்கத்தாவில் இன்றும், நாளையும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகளவு உள்ளது.
மழை பெய்தால் என்ன நடக்கும்?
பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்க உள்ள இந்த ஐபிஎல் போட்டி இன்று மாலை 5 மணி முதல் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்படுகிறது. மழை அச்சுறுத்தல் காரணமாக மைதானம் முழுவதும் தார்ப்பாய் போட்டு மூடப்பட்டுள்ளது.
ஒருவேளை மழை இன்று பெய்தால் இரவு 12.06 மணி வரை போட்டி நடத்துவதற்கு நேரம் குறிக்கப்பட்டுள்ளது. மழை இரவு வேளையில் விட்டால் 5 ஓவர் ஆட்டமாக போட்டியை நடத்த முடிவு செய்துள்ளனர். அப்படி 5 ஓவர் ஆட்டமாக நடந்தால் அந்த போட்டி 10.56 மணிக்கு தொடங்கப்படும்.
நடக்காவிட்டால் என்ன நடக்கும்?
ஒருவேளை மழை பெய்து ஆட்டம் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்படும். அதிகாரப்பூர்வமாக இன்றைய போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்க வேண்டும். டாஸ் 7 மணிக்கு போடப்படும்.
அணி வீரர்:
அனுபவமிகுந்த ரஹானே தலைமையில் கொல்கத்தா அணியும், இளம் வீரர் ரஜத் படிதார் தலைமையில் பெங்களூர் அணி களமிறங்க உள்ளது. கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர், ரஸல், ரகானே, டி காக், குர்பாஸ், ரிங்குசிங் ஆகியோர் பேட்டிங்கிற்கு பலமாக உள்ளனர். ஆல்ரவுண்டராக ராமன்தீப்சிங், மொயின் அலி, பவெல் உள்ளனர். பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், வைபவ் அரோரா ஆகியோர் உள்ளனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி படிதார் தலைமையில் களமிறங்குகிறது. விராட் கோலி ஆர்சிபி அணியின் மிகப்பெரிய நம்பிக்கையாக உள்ளார். பில் சால்ட், லிவிங்ஸ்ட்ன், டிம் டேவிட், ஷெப்பர்ட், சுவஸ்திக் ஷர்மா, பெத்தேல் உளளனர். பந்துவீச்சில் புவனேஷ்வர், ஹேசில்வுட், குருணல் பாண்ட்யா, யஷ் தயாள், நிகிடி, சுவப்னில் சிங் உள்ளனர்.