லுசிஃபர் 2 : எம்புரான்
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லான் நடித்துள்ள லூசிஃபர் 2 எம்புரான் திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. டொவினோ தாமஸ் , மஞ்சு வாரியர் , பைஜூ சந்தோஷ் , இந்திரஜித் சுகுமாரன் , சாய்குமார் ஃபாசில் , சச்சில் கெடெகார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஆண்டனி பெரும்பவூர் இப்படத்தை தயாரித்துள்ளார்
டிக்கெட் விற்பனையில் சாதனை
லூசிஃபர் 2 எம்புரான் படத்தின் முன்பதிவுகள் நேற்று தொடங்கியன. டிக்கெட் முன்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள்ளாக 96 ஆயிரம் டிக்கெட்கள் புக் மை ஷோவில் விற்றன. எந்த இந்திய படமும் செய்யாத சாதனை இது. லியோ , ஜவான் , பதான் போன்ற பிரம்மாண்ட படங்களின் சாதனையை முறியடித்துள்ளது லூசிஃபர்.
ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கல
இப்படம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பிருத்விராஜ் இப்படத்திற்காக மோகன்லால் ஒரு ரூபாய் கூட சம்பளமாக பெறவில்லை என்கிற தகவலை பகிர்ந்தார் " இந்த படத்திற்கான நடிகர் தேர்வு செய்யும்போது நிறைய பெரிய நடிகர்களை நடிக்க வைக்க நினைத்தேன். யுகே , சைனா நாட்டைச் சேர்ந்த நடிகர்களிடம் பேசினோம். அவர்களும் இந்த மாதிரியான ஒரு இந்திய படத்தில் நடிக்க ஆர்வம் காட்டினார்கள். ஆனால் ஏஜன்ட்ஸ் அவர்களுக்கு நிறைய சம்பளம் கேட்டார்கள். ஆனால் இந்த படத்திற்கு செலவிடும் ஒவ்வொரு ரூபாயும் மேக்கிங்கில் செலவிட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
இந்த படம் சாத்தியமாவதற்கு முக்கிய காரணம் மோகன்லால் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை. 80 கோடிக்கும் பட்ஜெட்டில் 60 கோடி ரூபாய் நடிகர்களின் சம்பளமாக கொடுத்து 20 கோடி மேக்கிங்கில் செலவிடும் படம் இது இல்லை. நாங்கள் மட்டுமில்லை படத்தில் வேலை செய்த அத்தனை பேரும் நாங்கள் செய்வது ஒரு புது முயற்சி என்பதை புரிந்துகொண்டார்கள். அதற்கேற்றபடிதான் அவர்கள் சம்பளம் வாங்கினார்கள்' என பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்