'ஆடம்பர வாழ்க்கை வாழனும்' அதுக்கு ஆடு திருடனும்; போலீசிடம் வசமாக சிக்கிய கும்பல்

திண்டிவனம் அருகே காரில் ஆடுகளை கடத்திய கும்பலை பொதுமக்கள் மடக்கியதால் காரை விட்டு விட்டு தப்பி ஓடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

Continues below advertisement

விழுப்புரம்: திண்டிவனம் அருகே காரில் ஆடுகளை கடத்திய கும்பலை பொதுமக்கள் மடக்கியதால் காரை விட்டு விட்டு தப்பி ஓடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

Continues below advertisement

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாங்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் மகன் பாலா(51) சொந்தமாக 8 பசுமாடுகள் மற்றும் 5 ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் வெளியில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்த போது 5 ஆடுகளை நேற்று காரில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் காரில் ஏற்றி கடத்த முயற்சி செய்தனர். அப்போது அதைக் கண்ட விவசாயி பாலா கத்தி கூச்சலிட்டதில் பொதுமக்கள் அந்த காரை சூழ்ந்து மடக்கினர்.

இதில் காரை அப்படியே விட்டுவிட்டு திருடர்கள் தப்பி சென்ற நிலையில் இதுகுறித்து ஒலக்கூர் போலீசாருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து போலீசார் காரை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதுகுறித்து விசாரணை செய்ததில் ஊமங்கலம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் மனைவி சரோஜினி தேவி (45), காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த லோகன் மகன் சரத்குமார்(34), தாம்பரம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மகன் வெற்றி (40) ஆகிய மூன்று பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவத்திற்கு திட்டமிட்டு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளிகளான சென்னை  சேர்ந்த பரூக் மற்றும் ஜெயக்குமார்  ஆகியோர் 20.03.2025 ந் தேதி இரவு கைது செய்து அவர்களிடமிருந்து திருடுவதற்கு பயன்படுத்திய சொகுசு கார் -1 மற்றும் இருசக்கர வாகனம் திருடிய ஆடுகளை விற்ற பணம் ரூபாய் 60,000/- ஆடுகளை விற்ற பணத்தில் வாங்கிய தங்கமோதிரம் 4 கைப்பற்றப்பட்டுள்ளது

மேலும்  திருட்டின் மூலம் சம்பாதித்து பரூக் தனது வங்கி கணக்கில் வைத்திருந்த பணம் ரூ.2,13,514/-முடக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் திருட செல்லும்போது பயன்படுத்தும் கார்களின் பதிவெண்ணை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு போலியான பதிவெண்ணை மாட்டிக்கொண்டும் சந்தேகம் வராமல் இருக்க முன்பக்க சீட்டில் ஒரு பெண்ணை அமர்த்திக்கொண்டு குடும்பமாக செல்வதுபோல் சென்று திருடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இவர்கள் மீது 2020 முதல் கடலூர் திருவண்ணாமலை செங்கல்பட்டு, தாம்பரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

மேலும், குற்றவாளியிடம் விசாரணை செய்ததில் எதிரிகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டு திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, செய்யார் சுற்றியுள்ள பகுதிகளிலும் செங்கல்பட்டு மாவட்டம், உத்திரமேரூர் ஒரத்தி, மதுராந்தகம் ஆகிய பகுதிகளிலும் விழுப்புரம் மாவட்டத்தில், செஞ்சி, கிளியனூர், பெரியதச்சூர், ஒலக்கூர், பிரம்மதேசம் ஆகிய பகுதிகளில் ஆடுகளை திருடியதாக விசாரணையில் தெரிவித்தனர்.

இவர்கள் ரூபாய் 8,65,000/ மதிப்புள்ள ஆடுகளை திருடியும் அந்த ஆடுகளை விற்று அந்த பணத்தை வைத்து சொகுசு கார்களை வாங்கியும் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர். மேலும் இவர்களிடமிருந்து சுமார் ரூ.5 லட்சம் மதிப்புடைய இரண்டு கார்கள், ஒரு இரண்டு சக்கர வாகனம், 7 ஆடுகள் கைப்பற்றியும் மேலும் ஆடுகளை விற்று வங்கி கணக்கில் போட்டுள்ள வைத்துள்ள பணம் ரூ.2,13,514 ஆகியவற்றை முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement