Indian 2: தைவானில் இருந்து தென் ஆப்பிரிக்கா பறந்த இந்தியன் தாத்தா..! புது கெட்-அப்பில் மாஸ் காட்டும் கமல்ஹாசன்..!

இந்தப் படத்தில் கமலுக்கு ஏழு வில்லன்கள் இருப்பார்கள் எனக்கூறப்படும் நிலையில், வரும் மே மாதத்துடன் படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது.

Continues below advertisement

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தைவானில் முன்னதாக நிறைவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக தென் ஆப்பிரிக்காவுக்கு படக்குழுவினர் விரைந்தனர்.

Continues below advertisement

இந்தியன் 2:

கமல்ஹாசன் - இயக்குநர் சங்கர் ஆகியோரின் கூட்டணியின் 1996ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இந்தியன்’. இந்திய சினிமாவின் உச்ச நடிகர்களுள் ஒருவரான கமல்ஹாசன், இந்தியன் படத்தில் இந்தியன் தாத்தாவாகவும் அவரது மகனாகவும் என இரட்டை வேடங்களில் கலக்கி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், அவருக்கு இந்தப் படம் தேசிய விருதைப் பெற்றுத்தந்தது.

மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்புகள் 21ஆம் நூற்றாண்டு தொடங்கியே எகிறிவந்த நிலையில், சென்ற 2018ஆம் ஆண்டு இந்தியன் 2 குறித்த அறிவிப்பு வெளியானது.

விறுவிறுக்கும் படப்பிடிப்பு:

அதன் பின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்தால் தடைபட்டது. தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பயணம், கொரோனா ஊரடங்கு, அதனிடையே சங்கர் - லைகா நிறுவனம் இடையேயான மோதல்  என தொடர்ந்து இடையூறுகள் ஏற்பட்டு வந்தன.

இந்நிலையில், இந்தப் பிரச்னைகள் எல்லாம் ஓய்ந்து கடந்த செப்டம்பர் மாதம் ஒரு வழியாக மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த் , பஞ்சாபி நடிகர் யோக்ராஜ் சிங், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், கிஷோர், ஜெயப்பிரகாஷ் என பலரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். 

புது கெட்டப்பில் கமல்:

முன்னதாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருப்பதி, சென்னை, பீகார் வனப்பகுதிகள் ஆகிய இடங்களில் நடைபெற்றது. முன்னதாக படக்குழுவினர் தைவானில் படப்பிடிப்பு நடத்திய காட்சிகள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் தைவானில் முன்னதாக படப்பிடிப்பு நிறைவடைந்து, அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தென் ஆப்பிரிக்காவுக்கு விரைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.  மேலும் தைவானில் கமல், இயக்குநர் ஷங்கர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.

 

இந்தப் படத்தில் கமலுக்கு ஏழு வில்லன்கள் இருப்பார்கள் எனக்கூறப்படும் நிலையில், வரும் மே மாதத்துடன் படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது. வரும் தீபாவளிக்கு இந்தியன் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: Munthiri Kaadu Review: சாதியை ஒழிக்க காதல்தான் ஒரே வழியா? என்ன சொல்ல வருகிறது முந்திரிக்காடு திரைப்படம்? விமர்சனம் இதோ

Continues below advertisement