ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ அணியை  ஹைதராபாத் அணி எதிர்கொள்கிறது.


ஐபிஎல் தொடரின் 16வது சீசன்  கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் சென்னை, டெல்லி, மும்பை,கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான்,குஜராத், லக்னோ, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய 10 அணிகள் கோப்பைக்காக களமிறங்கியுள்ளன. கொரோனா காலமாக உள்ளூர் மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில்  3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு அணியும் தங்களது உள்ளூர் மைதானத்தில் களமிறங்குவதால் ரசிகர்கள் இந்த ஐபிஎல் திருவிழாவை கோலகலமாக்கி வருகின்றனர்.  


இதனிடையே இன்று நடைபெறும் 10வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் பேட்டிங் செய்ய  முடிவு செய்துள்ளார். பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் மிகவும் பலமான அணியாக திகழும் லக்னோ அணியை ஹைதரபாத் அணியால் சமாளிக்க முடியுமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. 


மிரட்டும் லக்னோ


லக்னோ அணியை பொறுத்தவரை தனது முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் சென்னை அணியிடம் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலமாக விளங்கும் அந்த அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அதேபோல் ஹைதரபாத் அணி தனது முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடன் 72 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. உள்ளூர் மைதானத்தில் அந்த அணி தோல்வியடைந்தது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக மாறி விட்டது. இதனால் தனது முதல் வெற்றியை பெற அந்த அணி முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் இதுவரை ஐபிஎல் வரலாற்றில் லீக் போட்டியில் ஒரே ஒரு முறை மட்டுமே மோதியுள்ளது. கடந்தாண்டு நடந்த அந்த போட்டியில் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


மைதானம்  ஒரு பார்வை


லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 6 டி20 போட்டிகள் நடந்துள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 5 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. எனவே டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்யவே விரும்பும். அதேபோல் இம்மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது. இம்மைதானத்தில் மொத்தம் எடுக்கப்பட்ட  70 விக்கெட்டுகளில் 51 விக்கெட்டுகள் வேகப்பந்து வீச்சாளர்களால் எடுக்கப்பட்டுள்ளது. 


வீரர்கள் விபரம்


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி: கேஎல் ராகுல்(கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன்(விக்கெட் கீப்பர்), கிருஷ்ணப்பா கவுதம், மார்க் வூட், ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், அவேஷ் கான், ஆயுஷ் படோனி, குயின்டன் டி காக் , ஜெய்தேவ் உனத்கட், அமித் மிஸ்ரா, பிரேரக் மன்கட், டேனியல் சாம்ஸ், மனன் வோஹ்ரா, ஸ்வப்னில் சிங், நவீன்-உல்-ஹக், ரொமாரியோ ஷெப்பர்ட், யுத்வீர் சிங் சரக், கரண் சர்மா, மயங்க் யாதவ்


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி: அபிஷேக் சர்மா, மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம்(கேப்டன்), ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அடில் ரஷித், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், டி நடராஜன், ஃபசல்ஹக் ஃபரூக்கி, அப்துல் சமத், உபேந்திரன் யாதவ் பிலிப்ஸ், மயங்க் மார்கண்டே, ஹாரி புரூக், அகேல் ஹொசைன், மயங்க் டாகர், விவ்ராந்த் சர்மா, மார்கோ ஜான்சன், சமர்த் வியாஸ், அன்மோல்பிரீத் சிங், கார்த்திக் தியாகி, சன்வீர் சிங், நிதிஷ் ரெட்டி