இந்தியன் தாத்தாவாக கமல்


இந்தியன் 2 திரைப்படம் வரும் வாரம் ஜூலை 12ஆம் தேதி ரிலீசாகிறது. கமல்ஹாசன் - ஷங்கர் இணை இந்தியன் 1 முதல் பாகத்துக்குப் பிறகு 28 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தில் இணைந்துள்ள நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளை இப்படம் ஏற்படுத்தியுள்ளது. அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற இந்தியன் 2 பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், சித்தார்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


அப்போது, “கமல்ஹாசனுக்கு இந்தியன் முதல் பாகத்தில் மூன்று நாயகிகள் ஜோடிகளாக இருந்தனர். இந்தப் படத்தில் இல்லையே” என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், ”என்னுடைய ஜோடி என்பவர் ஒரு பெண்ணாக தான் இருக்க வேண்டுமென்பது இல்லை. கல்யாணத்துடன் வாழ்க்கை முடிந்து போய் விடாது. தாத்தா வரார் என்பதை நான் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டுள்ளேன்.


‘ஷங்கர், மணிரத்னத்துக்கு நன்றி’


இதற்கு முன்னாடியே வித்து போட்ட ஷங்கர், மணிரத்னம் ஆகியோருக்கு நன்றி சொல்ல வேண்டும். 30, 25 வயதுக்குள்ளேயே இந்த மாதிரி வேஷம் போட்டதால் எனக்கிருந்த வயோதிக பயம் என்பதை இவர்கள் இருவரும் நீக்கி விட்டார்கள். இதைவிட பெரிய ஒரு பயம் கதாநாயகனுக்கு இருக்க முடியாது. இப்படிப்பட்ட பயமில்லாமல் இவர்கள் என்னை அழகாக வயதாக வைத்து என் எண்ணத்தை மாற்றியிருக்கிறார்கள்.


சித்தார்த் உள்ளிட்டவர்களுக்கு நல்ல ஜோடி உள்ளனர். ஜோடி இல்லையே என எத்தனை நாளைக்கு வருத்தப்படுவது? ராமானுஜருடைய ஜோடி அந்த திருவரங்கன் தான், என்ன திடீரென பக்தி பேசுகிறார் என நினைக்காதீர்கள், நான் எல்லாம் பேசுவேன். ஜோடி இல்லாததை நான் இந்தப் படத்தில் ரொம்ப ரசித்தேன்.


தாத்தானு சொன்னால் என்ன, நான் தாத்தா தானே? காந்திய தாத்தானு சொல்லி அவர் குறைந்துவிட்டாரா. இல்லை அய்யானு கூப்பிடாமல் பெரியாரை தாத்தா என்றால் ஒன்றும் ஆகிவிடாது. அந்த தாடிக்கு டை அடிக்க முடியாது. உள்ளே இருக்கும் அவர் மனது போல் வெள்ளை வெளியே வந்துவிடும். தாத்தாவாக இருப்பதற்கு தான் நாம் பயிற்சி எடுத்துக் கொண்டே இருக்கிறோம். நீங்களும் எடுத்துக்கொள்ள வேண்டும்” எனப் பேசியுள்ளார்.


மேலும் படிக்க: Kamal Haasan: கெட்ட வார்த்தைகள் தடுத்தாலும் கேட்கும்.. சென்சார் வாரியத்திடம் கமல்ஹாசன் வேண்டுகோள்!


Bava Lakshmanan: "கல்யாணம் பண்ணிக்க பொண்ணு கொடுக்கல; ஆசையே விட்டு போச்சு" - மனம் திறந்த பாவா லட்சுமணன்