ஆம்ஸ்ட்ராங் கொலை

பகுஜன் சமாஜ்வாதி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னையில் அவரது வீட்டின் அருகிலேயே வைத்து வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு இரு சக்கரங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், இந்த கோர சம்பவத்தை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக போலீசார்  தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் தான், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக, கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு என்பவர் உட்பட 8 பேர் அண்ணாநகர் துணை ஆணையர் முன்பு போலீசில் சரணடைந்துள்ளனர்.

Continues below advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலையில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் தானா இந்த கொலையில் அரசியல் நோக்கம் உள்ளதா என காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று குரல் வலுத்து வருகின்றன.

வடசென்னை கானா இசையை வளர்த்தெடுக்க சொன்னார்

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பம் அவரது ஆதரவாளர்கள் மற்றும் பொதுச் சூழலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் எழுப்பியவர்களில் ஒருவர் ஆம்ஸ்ட்ராங். வடசென்னையைச் சேர்ந்த பலரின் கல்விக்காக அவர் உதவியதாக தெரிவிக்கப் படுகிறது. அம்பேத்கர் மற்று அயோத்திதாசர் போன்ற ஆளுமைகளின் எழுத்துக்களை தொடர்ச்சியாக பேசக்கூடியவர் ஆம்ஸ்ட்ராங் என்று அவரது நெருங்கிய நண்பர்கள் கூறியுள்ளார்கள்.

 

ஆம்ஸ்ட்ராங் பற்றி பா ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது படத்தின் இசையமைப்பாளர் டென்மா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் "வடசென்னையின் அரசன் , நான் பார்த்த மிக கனிவான மனிதர்களில் ஒருவர் வீழ்த்தப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் அண்ணா நம்முடன் இல்லை என்பதை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை. அவர் என்னிடம் ஃபோனில் பேசிய உரையாடல்கள் எனக்கு நன்றாக நினைவில் இருக்கின்றன. வடசென்னை கானா இசைச் சூழலை வளர்த்தெடுக்கச் சொல்லி அவர் என்னிடம் சொல்லியிருக்கிறார். ஆழ்ந்த இரங்கல் அண்ணா. ஜெய் பிம்" என்று டென்மா கூறியுள்ளார்.