தமிழ் திரையுலகின் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவர் பாவா லட்சுமணன். நடிகர் வடிவேலுவுடன் ஏராளமான படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கலகலப்பு படத்தில் சந்தானத்துடன் இணைந்து இவர் நடித்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பிரபலம் ஆகும். அதுவும் சாப்பிட்டு சாயங்காலம் தேடலாம் வாத்தியாரே என்ற வசனம் மிக மிக பிரபலம் ஆகும்.


பொண்ணு தர மாட்டேனு சொல்லிட்டாங்க:


சென்னையில் சிறிய அறை ஒன்றில் வசித்து வரும் இவர் தனியார் யூ டியூப் தொலைக்காட்சி ஒன்றிற்கு தான் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, ”எனக்கு ஆரம்பத்துல சினிமாக்காரன்னு பொண்ணு தரமாட்டேனு சொல்லிட்டாங்க. அது எங்கம்மா, எங்கப்பா, எங்கக்கா எவ்வளவோ ட்ரை பண்ணாங்க. ஆனா, யாரும் தரமாட்டேனு சொல்லிட்டாங்க.


ஒரு பொண்ணு கிடைச்சுச்சு. எல்லாம் ஓகே ஆன பிறகு, அந்த பொண்ணோட மாமாவும் தர மாட்டேனு சொல்லிட்டாரு. அதுக்குப்புறம் எனக்குப் போகப்போக எனக்கு அந்த ஆசையே விட்ருச்சு. கல்யாண ஆசையே இல்லாம போயிடுச்சு. எனக்கு சினிமா நண்பர்கள், என் கூட நடித்த நடிகர்கள் எல்லாம் பொண்ணு பாக்க முயற்சி பண்ணாங்க. அல்வா வாசு, மயில்சாமி அண்ணன் எல்லாம் பாத்தாங்க. எதுவுமே அமையல. அதுக்கு அப்புறம் எனக்கு கல்யாண ஆசையே விட்ருச்சு.


வருத்தம் இல்லை:


கல்யாணம் பண்ணலனு நான் ஒருநாள் கூட வருத்தப்பட்டதே இல்ல. நான் ஜனாதிபதி மாளிகைக்கு போயிருக்கேன். அவ்வளவு பெரிய மாளிகை. ஒவ்வொரு மாளிகையில இருந்தும் 10 பேர் வருவாங்க. அப்துல்கலாம் அவ்வளவு பெரிய ஜனாதிபதி மாளிகையில தனியா படுத்திருந்தாரு. அவரு கூட ஒரு உதவிாளர்தான் இருந்தாரு. அவருக்கும் தனி அறை கொடுத்துடுவாங்க. அவ்வளவோ பெரிய மாளிகையில அவ்ளோ பெரிய ஆளே தனியா இருந்தாரு. நாம சாதாரண ஆளு.


 எனக்கு லொள்ளு சபா பழனியப்பன், மறைந்த நடிகர் சேசு, நடிகர் ராஜாதி ராஜா, தெனாலி, ராஜேஷ், ஆரோக்கிய தாஸ் இவங்க எல்லாரும்தான் நான் ஆஸ்பத்திரியில இருந்தப்ப இந்த மாதிரி சின்ன சின்ன நடிகர்கள்தான் ஹெல்ப் பண்ணாங்க. என்னை அங்க சேர்த்த தகவல் தெரியவும் என் குருநாதர் விக்ரமன் சார் வந்தாரு.


பாலா பழக்கமே இல்ல:


வந்து பெரிய தொகையை கொடுத்து பாத்துக்கச் சொல்லிட்டு டாக்டர்கள் கிட்ட எல்லாம் பேசிட்டு போனாரு. இரண்டாவது நாள் வந்து பாத்தது கேபிஒய் பாலா. அவரு எல்லாம் பழக்கமே இல்ல. அவரு பெரிய தொகையை கொடுத்தாரு. எதுனாலும் கேளுங்க அண்ணேனு சொன்னாரு. ஆளு அனுப்பி விட்றேனு சொன்னாரு. கேமராமேன் ரவிவர்மன் வந்து பாத்தாரு, எங்க வீட்டு மீனாட்சி சீரியல் ப்ரொடியூசர் திவாகர், அவங்க ஒயிப் பிரவீனா மேடம் மிகப்பெரிய தொகையை கொடுத்துட்டு லட்சுமணன் நாங்க இருக்கோம், கவலைப்படாதீங்க. தேறி வந்துடுவீங்கனு சொன்னாங்க. இப்படி நிறைய பேரு ஹெல்ப் பண்ணாங்க.


நல்லா சந்தோஷமாதான் இருக்கேன், கார் வாங்குனா நிப்பாட்ட இடம் வேணும். டிரைவர் வேணும். டிரைவர் திடீர்னு வந்து என் தங்கச்சிக்கு கல்யாணம் 50 ஆயிரம் கொடுங்கனு சொன்னா என்ன பண்றது? நமக்கு வசதி வர்றப்ப என்னென்ன தேவையோ அப்பப்போ வாங்கிக்கலாம்.


ரொம்ப சந்தோஷம்:


வாழ்க்கையில நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஒரு அமைச்சர் போனா கூட யாருக்கும் தெரியாது. ஆனா, நாங்க போனா இவருதான் அந்த படத்துல நடிச்சாருனு சொல்றாங்க. அதுவே பெரிய பொக்கிஷம். அதுவே மதிய சாப்பாடு சாப்பிட்ட மாதிரி ஆகிரும்.


நான் அடிக்கடி ஐயப்பன் கோயிலுக்கு போவேன். 20 வருஷம் போயிட்டு வந்துட்டேன். நான் சாய்பாபா பக்தன். வெளியில போனா சந்தனம் இல்லாம போகமாட்டேன். அட்லீஸ்ட் குங்குமமாது வச்சுட்டு போவேன். குங்குமம் ஸ்ரீதேவி. அதை வச்சுட்டு போனா மூதேவி நெருங்காதுனு சொல்வாங்க. எங்கம்மா சொல்லிக் கொடுத்தது. அதுனால அதை வச்சுட்டு போவேன். இயக்குனர்கள் கூட லட்சுமணா நீங்க எப்படி இருக்கீங்களே அப்படியே இருங்கனு சொல்லிடுவாங்க.


இவ்வாறு அவர் பேசினார்.