அனிருத்
தமிழ் மட்டுமில்லை இந்திய திரையுலகிலேயே தற்சமயம் அதிகம் பேசப்படும் இசையமைப்பாளர் அனிருத். ஒன்றன் பின் ஒன்று என அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத். படம் வெளியாவதற்கு முன்பே வைரலாகும் பாடல்கள் , லூப்பில் கேட்கும் பின்னணி இசை என இந்த படங்களின் வெற்றிக்கு அனிருத் இசை மிகப்பெரிய பக்கபலமாக அமைகின்றன. கடந்த ஆண்டு இந்தியில் ஷாருக் கானின் ஜவான் , தமிழில் ரஜினியின் ஜெயிலர் , விஜயின் லியோ படங்களுக்கு இசையமைக்க அனிருத்திற்கு கோடிக்கணக்கில் சம்பளமாக வழங்கப் பட்டது. இந்த ஆண்டு ரஜினி நடிக்கும் வேட்டையன் , கூலி . அஜித் நடிக்கும் விடாமுயற்சி , தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் தேவாரா உள்ளிட்ட படங்களுக்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போதைய நிலைக்கும் தமிழ் திரையுலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் அனிருத்.
ரஹ்மானை விட அதிக சம்பளம் வாங்கும் அனிருத்
ஜவான் படத்திற்கு அனிருத் மொத்தம் 10 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியானது. இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் வாங்கும் அதிகபட்ச சம்பளமே 8 கோடி . கடந்த ஆண்டு வெளியான விஜயின் லியோ படத்திற்கு அனிருத் இதே 8 கோடி சம்பளமாக வாங்கினார். சமீபத்தில் வெளியான கமலின் இந்தியன் 2 படத்திற்கு அனிருத் 10 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு இசையமைப்பாளர் இவ்வளவு அதிக சம்பளம் வாங்குவது இதுவே முதல் முறை.
கடந்த ஜூலை 12 ஆம் தேதி வெளியான இந்தியன் 2 ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தைப் போலவே அனிருத்தின் இசையும் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. முதல் பாகத்திற்கு ரஹ்மான் கொடுத்த பின்னணி இசை இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மட்டுமே ரசிகர்களை கவர்ந்துள்ளன. இவ்வளவு சம்பளம் வாங்கும் அனிருத் இன்னும் சிறப்பான பாடல்களையும் பின்னணி இசையையும் கொடுத்திருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் படிக்க : Aishwarya Rai : மரத்துடன் நடந்த கல்யாணம்... தேவையில்லாத வதந்தி... அன்றே முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய் !
Vidamuyarchi : விடாமுயற்சி - அஜர்பைஜான் படப்பிடிப்பு நிறைவு.. மகிழ்ச்சியாக வீடியோ வெளியிட்ட படக்குழு