✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Aishwarya Rai : மரத்துடன் நடந்த கல்யாணம்... தேவையில்லாத வதந்தி... அன்றே முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய் !

Advertisement
லாவண்யா யுவராஜ்   |  22 Jul 2024 01:17 PM (IST)

Aishwarya Rai : தீய சக்திகளை விரட்ட அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர் மரத்தை கல்யாணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ராய் என்ற வதந்தி தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

ஐஷ்வர்யா ராய்

NEXT PREV
ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் சில காலம் டேட்டிங் செய்த வந்த பிறகு 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு ஆராத்யா எனும் ஒரு மகள் இருக்கிறாள். சமீபகாலமாக அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை வைத்து பல வதந்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் திருமணத்தின் சமயத்தில் பரவிய வதந்திகளுக்கு பத்திரிகை ஒன்றில் அவர் என்ன பதில் அளித்து இருந்தார் என்ற தகவல் தற்போது இணையத்தில் மீண்டும் ட்ரெண்டிங்காகி வருகிறது. 
 
ஐஸ்வர்யா ராய் பச்சன் - அபிஷேக் பச்சன் திருமணம் முடிந்து 17 வருடங்கள் நிறைவு அடைந்தாலும் இன்றும் அவர்களின் திருமணத்தின் விழாவை ரசிகர்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். திருமணத்துக்கு முன்னர் அமிதாப் பச்சனின் ஜூஹூ வீட்டில் வைத்து சில சடங்குகள் ரகசியமாக செய்யப்பட்டது என வதந்திகள் பரவின. அதில் ஒன்று பச்சன் உடன்  திருமணத்திற்கு முன்னர் ஐஸ்வர்யா ராய் ஒரு மரத்தை திருமணம் செய்து கொண்டார் என கூறப்பட்டது. செவ்வாய் தோஷ நிவர்த்திக்காகவும் குடும்பத்தின் நன்மைக்காகவும் அது செய்யப்பட்டது என கூறப்பட்டது. 
 
திருமணமாகி ஓர் ஆண்டிற்கு பிறகு இந்த வதந்திகள் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். அப்போது ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் திருமணத்தில் நடைபெற்ற எதிர்பாராத அம்சங்கள் குறித்து பேசி இருந்தார். கனவில் கூட நினைக்காத சில விஷயங்கள் நடைபெற்றன. ஆனால் அதை பற்றி இப்போது ஏன் நினைத்து பார்க்க வேண்டும். அவை தேவையற்றது என நினைத்தேன். ஒரு குடும்பமாக உறுதியாக நாங்கள் இருக்கிறோம். பொதுமக்களின் பார்வை எப்போதுமே எங்கள் மீது இருக்கும். மேலும் நமக்கு நாமே குரல் கொடுக்க வாய்ப்புகளும் உள்ளன.
 
ஒரு சில விஷயங்களை நாம் கற்பனையாக நினைத்து கடக்க நினைத்தாலும் அவை பதிவு செய்யப்படுகிறது. எனக்கு வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய போதிய வாய்ப்பு இருக்கிறது. அதனால் சர்வதேச ஊடங்கங்களுடன் தொடர்ந்து உரையாடி கொண்டு இருக்க வேண்டி இருக்கிறது. அப்போது அவர்கள் அபத்தமான கேலிக்கூத்தான விஷயங்களை கண்டு வியக்க துவங்குகிறார்கள். 'ஒரு மரத்தை திருமணம் செய்து கொண்டாயா?' உனக்கு இவ்வளவு பெரிய சாபமா? இப்படி கேட்கும்போது கடவுளே நான் எங்கு இருந்து தொடங்க போகிறேன் என தோணும்" என பேசி இருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராய். 
Published at: 22 Jul 2024 01:17 PM (IST)
Tags: Marriage Aishwarya Rai abhishek hospitalized
  • முகப்பு
  • பொழுதுபோக்கு
  • Aishwarya Rai : மரத்துடன் நடந்த கல்யாணம்... தேவையில்லாத வதந்தி... அன்றே முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய் !
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.