சட்டவிரோதமாக திரைப்படங்களை பார்ப்பது, இந்திய பொருளாதாரத்தில், ஆண்டுதோறும் ரூ. 22,400 கோடி அல்லது $2.7 பில்லியனாக இருப்பது மதிப்பிடப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உள்ளடக்கக் களவு - அறிக்கை:


திரைப்படத் துறையில், சட்டவிரோதமாக திரைப்படங்களை பார்ப்பது அதிகரித்து வருவதாக எர்ன்ஸ்ட் & யங் (EY) மற்றும் இன்டர்நெட்  மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (IAMAI) ஆகியவை  கூட்டாக இணைந்து, 'தி ராப் ரிப்போர்ட்  என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டதாவது “  டிஜிட்டல் தளங்களின் அதிகரித்து வரும் நிலையில் திரைப்படங்களை சட்டவிரோதமாக பார்ப்பது இன்னும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதன் விளைவாக, நன்கு தயாரிக்கப்பட்ட திரைப்படம் கூட வருவாய் ரீதியாக வெற்றியை அடைய சிரமம் ஏற்படுகிறது. சட்டவிரோதமாக இந்த அணுகலானது, இந்திய பொருளாதாரத்தில், ஆண்டுதோறும் ரூ. 22,400 கோடி அல்லது $2.7 பில்லியன்  இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏன் சட்டவிரோதமாக திரைப்படங்களை பார்ப்பது அதிகரிக்கிறது என்பது தொடர்பாக மூன்று முக்கிய காரணங்களை 'தி ராப் ரிப்போர்ட்' தெரிவித்துள்ளதாவது...


 1. சந்தா கட்டணம்:


 OTT இயங்குதளங்கள் வசூலிக்கும் சந்தாக் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாக பயனர்கள் உணர்கின்றனர்.



  1. விரும்பிய உள்ளடக்கம் கிடைக்க பெறாமை: 


அங்கீகரிக்கப்பட்ட தளங்களில், தாங்கள் விரும்பும் உள்ளடக்கத்தைக் கண்டறிய முடியவில்லை என்பதால், சட்டவிரோதமாக பைரசிகளை தேடி செல்ல அதிக வாய்ப்புகள் ஏற்படுகிறது.


 3.  பல சந்தாக்களை ( Subscriptions ) நிர்வகித்தல்:


திரைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்கு பல சந்தாக்களை ஏற்படுத்துவது என்ற மூன்று முக்கிய காரணங்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.


கருத்துக் கேட்பு:


EY-IAMI, திருட்டு உள்ளடக்கத்தை அணுகுவது தொடர்பாக கணக்கெடுக்கப்பட்டவர்களில் 84% பேர் திரைப்பட டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்தத் தயாராக இல்லை என்றும் அதே நேரத்தில் 70% பேர் திருட்டு உள்ளடக்கம் கிடைக்காவிட்டாலும், OTT சந்தாக்களுக்கு பணம் செலுத்தத் தயாராக இல்லை. இதில் 64% நுகர்வோர், விளம்பரத் தடங்கல்கள் இருந்தாலும், உள்ளடக்கம் இலவசமாக வழங்கப்படும் பட்சத்தில் அங்கீகரிக்கப்பட்ட சேனல்களுக்கு மாறுவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.