Diwali Car Offer: தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடிகளை பெற்றுள்ள கார்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
தீபாவளி கார் ஆஃபர்:
தீபாவளி நெருங்கி வருவதால், வாகன உற்பத்தியாளர்கள் புதிய மாடல்கள் மற்றும் சிறப்பு பண்டிகை ஆஃபர்களை வெளியிட்டு வருகின்றனர். எனவே, வாகனம் வாங்குவது போன்ற குறிப்பிடத்தக்க முதலீடு தேவைப்படும், நீண்ட கால ஆசைகளை நிறைவேற்ற இதுவே சிறந்த நேரம் ஆகும். வாகனங்களை வாங்குவதற்கு இந்தியாவில் தீபாவளி ஒரு நல்ல சந்தர்ப்பமாக கருதப்படுகிறது. அதன்படி, பல நபர்கள் தங்களுக்கு தேவையான வாகனத்தை வாங்குவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். வாடிக்கையாளர்கள் பண்டிகைக் காலத்தின் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் விலை தள்ளுபடிகளை பயன்படுத்தி பலன் பெறலாம். உங்கள் குடும்பத்திற்காக புதிய காரை வாங்க அல்லது பழைய காரை மாற்ற விரும்பினால், இந்த தீபாவளிக்கு சிறந்த தள்ளுபடிகளை பெற்றுள்ள சிறந்த கார்களை உங்களுக்காக கீழே பட்டியலிட்டுள்ளோம்.
கார்களுக்கான சிறந்த தீபாவளி சலுகைகள்
டாடா ஹாரியர் - டாடா ஹாரியர் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் விருப்பங்களுடன் ஜோடியாக 170 ஹெச்பியை உற்பத்தி செய்யும் சக்திவாய்ந்த 2.0 லிட்டர் டீசல் இன்ஜினைக் கொண்டுள்ளது. இந்த அசத்தலான டாடா எஸ்யூவி ஏராளமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த காருக்கு பல்வேறு தீபாவளி சலுகைகளை டாடா அறிவித்துள்ளது. அதன்படி, டாடா ஹாரியரை புதிய தொடக்க விலையான ரூ. 14.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருந்து ரூ.1,60,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.
மாருதி சுசூகி பிரெஸ்ஸா - மாருதி சுசூகி பிரெஸ்ஸா 1,462 சிசி பெட்ரோல் இன்ஜினுடன் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. 101.64 பிஎச்பியை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. இது மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி வாடிக்கையாளர்களை கவர்வதற்கு தேவையான அம்சங்கள் அனைத்தையும் கொண்டுள்ளது. இந்த காருக்கு பல்வேறு தீபாவளி சலுகைகளை மாருதி அறிவித்துள்ளது. அறிக்கைகளின்படி, மாருதி பிரேஸ்ஸாவை ரூ.42,000 வரையிலான சலுகைகளுடன் நீங்கள் உரிமையாக்கிக் கொள்ளலாம்.
ஹூண்டாய் வெர்னா - ஹூண்டாய் வெர்னா 2 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வழங்கப்படுகிறது. இந்த அட்டகாசமான ஹூண்டாய் செடான் காரானது பிரீமியம் அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் இந்த காருக்கு பல்வேறு தீபாவளி சலுகைகளை அறிவித்துள்ளது. அறிக்கைகளின்படி, ஹூண்டாய் வெர்னாவை ரூ.45,000 வரை சலுகைகளுடன் வழங்குகிறது.
மஹிந்திரா ஸ்கார்பியோ என் - மஹிந்திரா ஸ்கார்பியோ என் டீசல் மற்றும் பெட்ரோல் இன்ஜின் விருப்பங்களுடன் கிடைக்கிறது. மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ N இன் வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி சலுகைகளை வழங்கியுள்ளது. அறிக்கைகளின்படி, மஹிந்திரா இந்த காரை ரூ.50,000 வரை ரொக்க தள்ளுபடியுடன் வழங்குகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI