சுதந்திர தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு சுதந்திர தினத்தை முன்னிட்டும் நாடு முழுவதும் மிகப்பெரிய திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். இந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகும் இந்தியா முழுவதும் வெளியாகும் முக்கியமான திரைப்படங்களின் பட்டியலை கீழே காணலாம்.
தங்கலான்:
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம். இவர் முன்னணி இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் தங்கலான். மிகப்பெரிய பொருட்செலவில் சுதந்திரத்திற்கு முந்தைய கால திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகிறது. இந்த படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், கன்னடத்திலும் வெளியாகிறது.
டிமான்டி காலனி 2:
அருள் நிதி நடிப்பில் 2014ம் ஆண்டு வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற திரைப்படம் டிமான்டி காலனி. இந்த படத்தின் இரண்டாம் பாகமான டிமான்டி காலனி 2 தற்போது சுதந்திர தின கொண்டாட்டமாக வெளியாக உள்ளது. சுதந்திர தின ஸ்பெஷலாக வெளியாக உள்ள இந்த படத்தில் அருள்நிதியே நாயகனாக நடித்துள்ளார். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்தே இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார்.
ரகுதாத்தா:
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோயினாக உலா வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரகு தாத்தா. நகைச்சுவையாக உருவாகியுள்ள இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் உள்பட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படம் கீர்த்தி சுரேஷை முதன்மையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
டபுள் ஐ ஸ்மார்ட்:
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக உலா வருபவர் ராம் பொத்தேனி. இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டபுள் ஐ ஸ்மார்ட். தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பூரி ஜெகந்நாத் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுதந்திர தினம் கொண்டாட்டமாக இந்த படம் வருகிறது. இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியிலும் வெளியாகிறது.
மிஸ்டர் பச்சன்:
தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய நடிகராக உலா வருபவர் ரவிதேஜா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரைப்படம் மிஸ்டர் பச்சன். ஹரிஷ் சங்கர் இயக்கியுள்ள இந்த படத்தை பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாக நடித்துள்ளார்.
பைரதி ரனகல்:
கன்னட திரையுலகின் மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக உலா வருபவர் சிவராஜ்குமார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பைரதி ரனகல். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நர்தன் இயக்கியுள்ளார். இது சிவ்ராஜ்குமாரின் 126வது படமாகும்.
கேல் கேல் மெயின்:
இந்தி திரையுலகின் உச்ச நட்சத்திர நடிகராக உலா வருபவர் அக்ஷய் குமார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கேல் கேல் மெயின். இந்த படத்தில் டாப்சி, வாணி கபூர், அம்மி விர்க், ஆதித்யா சீல் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் இந்தியில் வெளியாகிறது.
மலையாள திரையுலகின் பிரபல நடிகை பாவனா. தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஹண்ட். ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ள இந்த படம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.
இந்த படங்கள் மட்டுமின்றி சிறு, சிறு பட்ஜெட் படங்களும் ஒவ்வொரு திரையுலகங்களிலும் வெளியாகிறது.