உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடி வரும் இந்திய அணிக்கு தங்கலான் படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’. நடிகைகள் மாளவிகா மோகனன், பார்வதி, நடிகர் பசுபதி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தங்கலான் படக்குழு இன்று உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
“வரலாறு படைக்க இன்னும் ஒரு ஸ்பெட் தான், எங்கள் சேம்பியன்ஸூக்கு சியர்ஸ் சொல்கிறோம்” எனப் பதிவிட்டு போஸ்டர் ஒன்றையும் பகிர்ந்துள்ளது.
ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை இறுதிப்போட்டி (IND vs AUS Final 2023) தற்போது நடைபெற்று வருகிறது.
குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மதியம் தொடங்கி உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்ந்தெடுத்த நிலையில், இந்திய அணி முதல் பேட்டிங் செய்து வருகிறது. முதல் இன்னிங்ஸின் முடிவில் இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்களைக் குவித்து ஆல் அவுட் ஆனது.
ஆஸ்திரேலிய அணிக்கு 241 ரன்கள் இலக்கை இந்திய அணி நிர்ணயித்த நிலையில், இந்திய அணி சார்பில் கே.எ. ராகுல் 66 ரன்களையும், விராட் கோலி 54 ரன்களையும் குவித்தனர். இந்நிலையில் இந்திய அணி வெற்றிபெற பிரபலங்கள், திரையுலகினர், ரசிகர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து மழையைப் பொழிந்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Chinmayi: இது மன்சூர் அலிகானின் தப்பு மட்டுமில்ல.. ராதாரவி, ரோபோ சங்கர், கூல் சுரேஷ்.. வரிசைக்கட்டி விளாசிய சின்மயி!