த்ரிஷா பற்றிய மன்சூர் அலிகானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பாடகி சின்மயி பதிவிட்டுள்ளார். 


"மன்சூர் அலிகான் போன்ற மனிதர்கள் எப்போதும் இப்படித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை ஒருபோதும் யாரும் கண்டித்ததில்லை. அதிகாரம், பணம் மற்றும் செல்வாக்கு உள்ள மற்ற மனிதர்களுடம் இவர்களுடன் சேர்ந்து சிரித்துக் கொண்டு தான் இருந்தார்கள். 


‘இப்படி தான் ரோபோசங்கர் பேசினார்'


ஏய் ஆமாடா மச்சான், கரெக்ட் டா மச்சான் எனப் பேசுவார்கள்.  இதேபோல் நடிகையை தொட தன்னை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு ரோபோ ஷங்கர் பேசினார். பத்திரிகையாளர் ஒருவர் சொல்லும் வரை அந்த நடிகைக்கு அவர் என்ன பேசினார் என்று தெரியவில்லை. 


மற்றவர்கள் அதுவரை வசதியாக சிரித்துக் கொண்டு தான் இருந்தார்கள்.  எங்க ஹீரோயின்ஸ் எல்லாம் கொழு கொழுனு இருந்தா தான் எங்க பசங்களுக்கு பிடிக்கும். சைஸ் ஜீரோ வராது என்றார். ஒட்டுமொத்த ஆடியன்ஸூம் கைத்தட்டினார்கள்.


இதேபோல் கூல் சுரேஷ் ஒரு நிகழ்ச்சியில் மோசமாக தொகுப்பாளினியிடம் நடந்து  கொண்டார். அதன் பின் அவர் மன்னிப்பு கோரி பொறுப்பேற்றுக் கொண்டார். இது மன்சூர் அலிகானின் தப்பு இல்லை. இந்த பிஹேவியர் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


ராதாரவிக்கு கைத்தட்டல்


ராதாரவி  வில்லன் நடிகர்களை திரைப்படங்களில் இன்னும் அதிகமாக ரேப் பண்ணுங்கள் என ஊக்குவித்தது எனக்கு நினைவில் உள்ளது. ஒரு விருது விழாவில் அவர் இப்படி பேசினார். ஒட்டுமொத்த அரங்கமும் அப்ளாஸ் தந்தது. அதற்கு சில நாள்கள் கழித்து தான் நிர்பயா கூட்டுப் பாலியல் வன்முறை நிகழ்ந்தது. அப்போதும் ஒரு பெண் நடு ராத்திரி இந்த நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்தார் என்று தான் கேட்டார்கள். 


கூப்பிடுறவங்க, கும்பிடறவங்க இடையே வித்தியாசம் இருக்குனு அவர் சொன்னார். நான் ட்வீட் செய்யற வரை யாரும் இது பத்தி பேசல.. இதுக்கு அப்றம் ஏதாவது நடந்துச்சா? நிறைய மக்களோட இதேபோன்ற குப்பையான மனநிலையுடன் தான் இருக்கிறார்கள். 


மன்சூருக்கு தொடர்ந்து வேலை வரும்


மன்சூர் அலிகானுக்கு தொடர்ந்து வேலை கிடைத்துக் கொண்டு தான் இருக்கும். இப்படி தான் இந்த உலகம் இயங்குகிறது. எத்தனையோ ஆடியோ வெளியீட்டு விழாக்களில் இப்படி வயிற்றுப்போக்கு வந்தது போல் பேசியும் ராதாரவி தொடர்ந்து பணி வாய்ப்புகளைப் பெற்றுக் கொண்டு தான் இருந்தார்.


சில ஆண்கள் வெளிப்படையாக  இப்படி கேவலமாக இருப்பதில் பெருமை கொள்கிறார்கள். “நான் ஆம்பள என்னால முடியும். உன்னால முடிஞ்சா நீயும் இப்படி இரு” னு பேசுவாங்க. இந்த மக்கள் ஒருபோதும் மாற மாட்டார்கள், அவர்கள் 126 வயது வரை நீண்ட காலம் வாழ்கிறார்கள். அதுவரை இப்படி விஷத்தைக் கக்குவார்கள்.


‘நீங்களே கேளுங்களேன் டா..’


இதுபோன்று பாலியல் வன்முறைக்கு மன்னிப்பு கோருபவர்கள் மறைந்தால் தான், அடுத்த தலைமுறை சிறப்பாக இருக்கும். அது வரைக்கும் மாற்றம் கண்டிப்பாக நிகழாது” எனப் பதிவிட்டுள்ளார்.


தொடர்ந்து சின்மயியின் பதிவுக்கு இணையத்தில் சிலர் எதிர்வினையாற்றிய நிலையில், அவர்களைக் கண்டித்தும் சின்மயி பதிவிட்டுள்ளார். “தமிழ் சினிமா ஃபேன் பாய்ஸ் மற்றும் அவர்களின் டாக்ஸிக் மனநிலை இன்று முழுவீச்சில் உள்ளது. இதப் பத்தி சொல்லுடி அதப்பத்தி சொல்லுடி அப்டி இப்டினு..


 






நீங்களே கேளுங்களேன் டா? எப்பபாத்தலும் ஆண்மய்யவாத குப்பையை பெண்கள் தான் அகற்றணுமா என்ன? நீங்களே சுத்தம் பண்ணுங்களேன் சரியான மனிதனா இருந்தா..” எனப் பதிவிட்டுள்ளார்.