இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை  அம்ரிதா ஐயர் , படம் வெளியான நாட்களில் இருந்தே அம்ரிதா சமூக வலைதளத்தில் பிரபலமாக தொடங்கினார் . தினமும் இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் வீடியோ கண்டிப்பாக வைரலாக தொடங்கின. தினமும் ஒரு ஃபோட்டோஷூட் என்று ரசிகர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலே வைத்து இருக்கிறார் இவர். தற்பொழுது ஒன்றரை மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ளார் .




இந்நிலையில் , நேற்று இவர் பதிவிட்ட புகைப்படம் மிகுந்த வைரலாகி உள்ளது . குளியல் அறையில் குளிக்கும் டப்பிற்குள் உக்காந்தவாறு இவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது . புகைப்படம் எடுக்க இதுவே சரியான இடம் என்று இந்தப் படத்திற்கு  கேப்சன் ஒன்றை பதிவிட்டு இருந்தார் . ரசிகர்கள் இந்த படத்திற்கு பெரும் லைக்ஸை குவித்தது மட்டும் அல்லாமல் வாட்சப்பில் ஃபார்வார்டுகளை தெறிக்கவிடுகிறார்கள்.





தற்பொழுது நடிகை  பிக்பாஸ்  புகழ் கவினுடன் "லிஃப்ட்" என்னும் திரைப்படத்தை நடித்து முடித்தார் .படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது . படம் முழுக்க முழுக்க கொலை மற்றும் இன்வெஸ்டிகேஷன் சார்ந்தாக இருக்கக்கூடும் என்று படக்குழுவினர் கூறி இருந்தனர். வினீத் வரப்ரசாத் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிரிட்டோ மைக்கேல் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் .மேலும், இந்த படத்தின் திரையரங்க உரிமை "லிப்ரா தயாரிப்பு நிறுவனம்” வாங்கியுள்ளது என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 




இந்தப்படத்தின் " என்ன மயிலு " பாடல் தற்பொழுது ஹிட்  ஆனது நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இவருடன் இணைந்து சூப்பர் சிங்கர் மற்றும் மாஸ்டர் திரைப்படத்தின் புகழ் பூவையரும் இந்தப் பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  தற்பொழுது படத்தின் நாயகியும் வைரல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். படத்தின் வெளியீடு பற்றி மிக விரைவில் செய்திகள் வெளியாகும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர் . கண்டிப்பா படம் வெற்றி பெற்றுவிடும் என்று பலரும் அவரின் புகைப்படத்திற்கு கீழ் கமெண்ட் செய்துவருகிறார்கள் . அது என்னவோ தற்பொழுது பாத்ரூம் டூர் தொடங்கி பாத்ரூம் போட்டோஷூட் வரை அனைத்தும் வைரலாகி விடுகின்றன .லாக்டவுனில் பலரும் தங்களின் அதிரடி திறமைகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வைரலாகி வருகின்றனர்.