மீரா போர்வாங்கர்


150 ஆண்டுகால மும்பை காவல்துறை வரலாற்றில் மும்பை குற்றப்பிரிவுத் துறைக்கு தலைமை தாங்கிய பெண் என்ற பெருமைக்குரியவர் மீரா போர்வாங்கர். மும்பையை அச்சுறுத்திய கேங்க்ஸ்டரும் பயங்கரவாத தொடர்பும் கொண்ட அபு சலீம் வழக்கு, மகாராஷ்டிராவை அதிரவைத்த ஜல்கான் பாலியல் வன்கொடுமை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை விசாரித்தவர் மீரா போர்வாங்கர்.



1981-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா கேடரில் ஐபிஎஸ் அதிகாரி ஆன மீரா போர்வாங்கர், மும்பை துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றினார், 1993-95-ஆம் ஆண்டில் சிஐடி பிரிவிலும் பணியாற்றினார் மீரா. 1997ஆம் ஆண்டில் காவல்துறை பதக்கமும், இயக்குநர் ஜெனரலுக்கான இன்சிஜினியா பதக்கமும் இவரது சாதனைக்கு அணி சேர்த்து வருகின்றன. ஆண்களை விட பெண்கள் எல்லா வகையிலும் மிகவும் திறமையானவர்கள் என்று கூறும் மீரா போர்வாங்கர், பெண்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும், சுய சந்தேகம் இல்லாமலும் செயல்படத் தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்கிறார்.


சங்கீதா கலியா


அமைச்சர்கள் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க துணிந்த ஐபிஎஸ் அதிகாரியாக சங்கீதா கலியா உள்ளார். 90-களில் உதான் தொலைக்காட்சியில் வெளியான டிவி சீரியலில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்த கவிதா சவுத்திரியின் கதாபாத்திரம், ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற உத்வேகத்தை தனக்கு அளித்ததாக கூறும் சங்கீதா கலியா,



பொருளாதாரத்தில் முதுகலை படிப்பை முடித்தவர், பேராசிரியராக பணியாற்ற தொடங்கிய போதே யுபிஎஸ்சி தேர்வை எழுத முயற்சிகளை மேற்கொண்டார். யுபிஎஸ்சி தேர்வை மூன்று முறை எழுதிய பின் தனது கனவை மெய்ப்பித்த சங்கீதா தற்போது நிஜ ஹீரோவாக மாறியுள்ளார். ஃபதேஹாபாத் காவல்துறையின் ஓவியாராக பணியாற்றிய சங்கீதா காலியாவின் தந்தை, தனது மகளின் கனவை நனவாக்க தொடந்து ஆதரவளித்தார். 2010-ஆம் ஆண்டில் ஹரியானா காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக சங்கீதா சேர்ந்தபோது காவல்துறையில் இருந்த பணியில் இருந்து ஓய்வு பெற்ற சங்கீதாவின் தந்தை பெருமை மிகு தருணமாக உணர்ந்தார். 2015-ஆம் ஆண்டில் ஃபதேஹாபாத்தில் போலீஸ் சூப்பிரண்டாக இருந்தபோது சங்கீதாவின் பணி பலரது கவனத்தை ஈர்த்தது. கூட்டம் ஒன்றில் இருந்து வெளியேற சொன்ன ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக சுகாதாரத்துறை அமைச்சரால் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டார். அதிகாரத்தை நியாயமற்ற முறையில் பயன்படுத்துவதற்கு எதிராக சங்கீதா நின்றதால் பலரது ஆதரவை அவர் பெற முடிந்தது.


ருவேதா சலாம்


தனது தந்தையின் கனவை நிறைவேற்றியதன் மூலம் காஷ்மீரின் முதல் ஐபிஎஸ் அதிகாரி என்ற புதிய வராலாற்றை படைத்த பெருமைக்கு உரியவர் ருவேதா சலாம். ஸ்ரீநகரில் தனது எம்.பி.பி.எஸ் படிப்பை படித்து முடித்த பிறகு, அவர் சிவில் சர்வீஸ் தேர்வை இரண்டு முறை எழுதினார். ருவேதா சலாம் தனது இரண்டாவது முயற்சியில் தனது வெற்றி இலக்கை அடைந்தார்.



ஹைதராபாத்தில் தனது ஐபிஎஸ் பயிற்சியை முடித்த ருவேதா, சென்னையில் உதவி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தான் இந்திய வருவாய் பணிக்கு செல்ல நினைத்ததால் தற்போது அவர் ஜம்முவில் வருமான வரி பிரிவின் உதவி ஆணையராக உள்ளார். ஜம்மு காஷ்மீரில் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக நினைக்கும் பல்வேறு இளைஞர்களுக்கு ஊக்க உரைகளையும் ருவேதா சலாம் வழங்கி வருகிறார்.


சவுமியா சாம்பசிவம்


சிம்லாவின் முதல் ஐபிஸ் அதிகாரி என்ற பெருமைக்குரியவர் சவுமியா சாம்பசிவம். 2010-ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான இவர். போதை பொருள் மாஃபியாவுக்கு எதிரான தீவிர புலனாய்வின் மூலம் பலரை கைது செய்து சிறையில் அடைத்ததால் ஜனாதிபதியின் விருதுக்கு இவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.



சிம்லாவின் முதல் பெண் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற சவுமியா. தனது கண்டிப்பான செயல்பாடுகளால் மக்களிடையே அறியப்பட்ட சவுமியா, சிர்மௌரில் நடந்த ஆறு கொலை வழக்குகளையும் விசாரித்தார். பெண்களின் சுய பாதுகாப்பில் தனி கவனம் செலுத்தி வந்த சவுமியா, மிளகு தெளிப்பான்களை ஆபத்து நேரத்தில் பெண்கள் எப்படி பயன்படுத்துவது என்று விளக்கும் காட்சிகள் அப்பகுதி மக்களிடையே பிரபலமானது.


சோனியா நாரங்


2002-ஆம் ஆண்டு பிரிவின் ஐபிஎஸ் அதிகாரியான சோனியா நரங். 1999ஆம் ஆண்டில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் தங்கப்பதக்கம் பெற்றவர். பின்னர் குற்றப்புலனாய்வுத்துறையில் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பொறுப்பேற்ற சோனியா நரங்.



துணை காவல் ஆணையராக இருந்த தனது தந்தையான ஏ.என்.நரங்- தனது ஐபிஎஸ் கனவிற்கு உத்வேகம் அளித்ததாக கூறுகிறார். 2013-ஆம் ஆண்டில் நடந்த 16,000 கோடி சுரங்க முறைக்கேட்டில் சோனியாவிற்கு தொடர்பிருப்பதாக கர்நாடக முதல்வர் குற்றம்சாட்டிய நிலையில், சட்டவிரோதமாக சுரங்கங்கள் நடத்தப்படும் இடங்களுக்கு நான் பொறுப்பாளராக நியமிக்கப்படாதபோது எப்படி என் பாக்கெட்டிற்கு பணம் வந்திருக்க முடியும் என ஊடகங்கள் வாயிலாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கேள்வி எழுப்பி இருந்தார்.  கர்நாடகாவில் நீண்ட வரலாற்றில் பெங்களூரு தெற்கு பிரிவின் துணை ஆணையராக இருந்த இரண்டாவது பெண் அதிகாரியாக இருந்த சோனியா, குற்றப்புலனாய்வுத்துறையிலும் பணியாற்றி சாதனை புரிந்துள்ளார்