இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது நீளமான முடியை குறைத்ததற்கான ரகசியத்தை இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு வெளியே சொல்லியுள்ளார். 

Continues below advertisement


தமிழர்கள் மட்டுமின்றி இந்தியாவையே உலக நாடுகள் திரும்பி பார்க்க வைத்தவர் தான் ஏ.ஆர். ரஹ்மான். தனது இசையால் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கிய இவர் இசைப்புயல் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். 


ஆரம்ப காலத்தில் இளையராஜாவிடம் உதவியாளராக இருந்த ஏ.ஆர். ரஹ்மான், மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் முதன் முதலாக திரைப்படங்களுக்கு இசை அமைக்க தொடங்கினார். முதல் படமே யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ஏ.ஆர்.ரஹ்மானிற்கு தேசிய விருதை பெற்று தந்தது. ரோஜாவின் பாடலின் இசை இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. ரஹ்மானின் தனித்துவமான இசை அவரை தனியாக அடையாளப்படுத்தி காட்டியது. 


திரைப்படங்களில் இசை அமைத்து கொண்டிருக்கும் போதே ரஹ்மானின் இசையில் வெளிவந்த வந்தே மாதரம் பாடல் அவரை மேலும் உச்சத்துக்கு கொண்டு சென்றது. கோலிவுட் மட்டும் இல்லாமல், பாலிவுட், ஹாலிவுட் என ரஹ்மானின் இசைப்பயணம் நீண்டு கொண்டே சென்றது. திரைப்படங்களுக்கு மட்டும் இசை அமைக்காமல், பாடகராகவும், இசைக்கான மேடை நிகழ்ச்சிகள் நடத்துவது, ஆல்பம் பாடல்களை வெளியிடுவது என ரஹ்மானின் அடுத்தடுத்த இசை பயணம் முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட வேலைகளிலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்காக இசைப்பயிற்சியும் அளித்து வருகிறார். 


இசை ஜாம்பவனாக வலம் வரும் ஏ.ஆர். ரஹ்மான் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அவ்வபோது பகிர்ந்து கொள்வது வழக்கம். அப்படி அண்மையில் நேர்க்காணல் ஒன்றில் பேசிய ஏ.ஆர். ரஹ்மான் தனது ஹேர்ஸ்டைல் குறித்து பேசியுள்ளார். ரோஜா படம் வந்ததற்கு பிறகு இசைப்புயலாக கொண்டாடப்பட்ட ஏ.ஆர். ரஹ்மன் நீளமான முடி வைத்திருந்தார். ரசிகர்களும் அவரது ஸ்டைலில் முடி வளர்த்தனர்.


இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக ரஹ்மான் ஷார்ட் ஹேர்ஸ்டைலை வைத்துள்ளார். இது குறித்து கேள்விக்கு பதிலளித்த ஏ.ஆர். ரஹ்மான், “நீளமான முடி வைத்திருந்தால் பக்கத்துல படுக்கமாட்டேன்னு என் பொண்டாட்டி சொல்லிட்டாங்க. நாங்க தான் இப்படி முடி வச்சிருக்கோம். நீ ஏன் இப்படி வச்சிருக்கன்னு கேட்டாங்க. என் முடிமேல பொறாம. பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும். அதான் முடி ஷார்ட் பண்ணேன்னு” பேசியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மானின் இந்த பதிலை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். 






1995ம் ஆண்டு பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணாக சாய்ரா பானுவை ஏ.ஆர். ரஹ்மான் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கதீஜா, ரஹிமா என்ற இரு மகள்களும், அமீன் என்ற ஒரு மகனும் உள்ளனர். 


மேலும் படிக்க: Lokesh Kanagaraj: ரூ.1.70 கோடியில் சொகுசு கார் வாங்கிய லோகேஷ் கனகராஜ்.. இணையத்தில் வைரலாகும் போட்டோ..!


Ethir neechal August 17 Promo : அப்பத்தா கண் முழிச்சாச்சு... கோபத்தில் கொந்தளிக்கும் குணசேகரன்... பரபரப்பின் உச்சக்கட்டத்தில் எதிர்நீச்சல்..!