சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் கதிர் மற்றும் வளவனுக்கு ஜீவானந்தம் இன்று கவுஞ்சிக்கு வரும் தகவல் கிடைத்ததால் அவருக்காக வெறியுடன் காத்திருக்கிறார்கள். மறுபக்கம் பெரியவரின் வீட்டில் தங்கி இருந்த ஜனனியை, பெரியவர் ஜீவானந்தம் வீடு இருக்கும் இடத்தை காட்டி அனுப்பி வைக்கிறார். வளவனுக்கு அவனின் ஆட்கள் மூலம் ஜீவானந்தம் வீடு இருக்கும் இடம் தெரிந்துவிட்டதால் அவர்களும் அங்கே செல்கிறார்கள். ஜனனியும் கதிரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை.
சக்திக்கு அம்மை வார்த்துள்ளதால் மஞ்சள் தண்ணீர் ஊற்றி ஈஸ்வரி குளிக்க வைக்கிறள். அதை வீட்டில் உள்ள அனைவரும் தள்ளி நின்று பார்த்து கொண்டு இருக்கிறார்கள். அப்போது குணசேகரன் அங்கு வந்து வழக்கம் போல திமிராக பேசுகிறார். அதற்கு நந்தினி தகுந்த பதிலடி கொடுக்கிறாள். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
இன்றைய எபிசோடில் மிகவும் சோர்வாக ஜீவானந்தத்தை சந்திப்பதற்காக மலையேறி கொண்டு இருக்கிறாள் ஜனனி. பல நாட்களாக கோமாவில் இருந்த அப்பத்தா கண்முழித்து விடுகிறார். அந்த சந்தோஷத்தில் அனைவரும் அவரின் அருகில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த நேரத்தில் குணசேகரன் முறைத்து கொண்டே வந்து நிற்கிறார்.
நந்தினி சென்று ஈஸ்வரியிடம் அப்பத்தா கண்முழித்த விஷயத்தை மாடியிலிருந்த படியே சொல்லி வாங்க என அழைக்கிறாள். அதை கேட்டு ஈஸ்வரிக்கும் சக்திக்கும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
கண்முழித்த அப்பத்தாவிடம் வந்த குணசேகரன் "மகராசன் மாதிரி வாழ்ந்தேன் நான் மதுரையில.என்னை பித்துக்குளி மாதிரி அலையவிட்டல பைத்தியம் புடிச்சு. பாத்தியா... ஒத்தை கை விளங்காம போயிடுச்சு. எல்லாம் உன்னால" என கையை காட்டி அப்பத்தாவை திட்டுகிறார் குணசேகரன்.
"சும்மா பொய் சொல்லிக்கிட்டு திரியுறாரு..." என ரேணுகா சொல்ல அப்படியே வெறிகொண்டு போய் எகிறிக்கிட்டு வருகிறார் குணசேகரன். அவரை பார்த்து நந்தினியும் ரேணுகாவும் முறைக்கிறார்கள். இது தான் இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
இன்றைய எபிசோட் மிகவும் பரபரப்பாக இருக்க போகிறது. அப்பத்தா வாயை திறந்து நடந்தது என்ன என்பதை பற்றி சொல்வாரா? ஜீவானந்தத்தை சந்திக்க ஜனனி எடுத்துள்ள முயற்சி வெற்றி பெறுமா? வளவன் கதிரின் திட்டம் என்னவாக போகிறது? அப்பத்தா கண்முழித்த விஷயம் ஜனனிக்கு தெரிவிக்கபடுமா? இப்படி பல கேள்விகளுக்கும் இன்றைய எதிர் நீச்சல் எபிசோடில் விடை கிடைக்கும் என்பதால் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் சின்னத்திரை ரசிகர்கள்.