இளையராஜா தன் ட்விட்டர் பக்கத்தில், நியூசிலாந்து நாட்டில் இசை நிகழ்ச்சி நடத்த சென்றுள்ளதாக ட்வீட் செய்துள்ளார். இசை தயாரிப்பாளர்கள், இசை கலைஞர்கள் அனைவரும், சினிமாவிற்கு இசை அமைப்பவதை தவிர்த்து கான்சர்ட் எனப்படும் இசை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். நாடு நாடாக சென்று அங்குள்ள தமிழ் மக்களை இசை மழையில் நினைய வைக்க ஆயத்தமாகவுள்ளார்கள். இந்த இசை கச்சேரிகள்
மூலம், பிரபலமான இவர்கள் அவர்கள் பாடிய ஹிட்டான பாடல்களை பாடி மக்களின் மனதில் இடம் பிடித்து வருகின்றனர்.
தற்போது, இசைஞானி இளையராஜா, அவரது ட்விட்டர் பக்கத்தில் நியூசிலாந்து விமானத்துடன் ஒரு போட்டோவையும் ஒரு வீடியோவையும்
ஷேர் செய்து, “ நியூசிலாந்து, மியூசிக் கான்சர்ட்டுக்கு தயாரா?” என்று கேள்வி கேட்டுள்ளார். இது போன்று, இளையராஜா வரும் அக்டோபர் 15 ஆம் தேதி துபாயில் இசை அரங்கம் எனும் இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.
இதனை பார்த்த நியூசிலாந்து வாழ் தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவரின் ட்வீட்டுக்கு, மேஸ்ட்ரோ, வெயிடிங், வாழ்த்துக்கள் என கமெண்ட் மழை பொழிந்து வருகின்றனர்.இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் பதிவீடு முன்னதாகவே முடிந்து இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.
இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா, சமீபத்தில் நேரு உள் அரங்கத்தில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தினார். அதற்கு முன்பாக மலேசியா, துபாய் போன்ற உலக நாடுகளிலும் இசை கட்சேரியை நடத்தினார். இந்நிகழ்ச்சிகளின் டிக்கெட் விலை சற்று கூடுதலாக இருந்தாலும், அங்கு ஒலிக்கும் இசைக்காகவும், மக்களுக்கு பிடித்த இசை கலைஞர்களுக்காகவும் ஆயிர கணக்கில் செலவு செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க : HBD Mysskin: தமிழ் சினிமாவின் ‛சமரசமற்ற கலைஞன்’ ..இயக்குநர் மிஷ்கினின் பிறந்தநாள் இன்று..!