சினேகன் , கன்னிகா திருமணத்தில் கலந்துக்கொள்ள முடியாத காரணத்தால், இருவரையும் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. மேலும் சிநேகனுக்கு தங்க மோதிரத்தையும் பரிசாக வழங்கியுள்ளார்.
இனிய நண்பர். வரும் ஜூலை 29 அன்று செல்வி கன்னிகாவுடன் இல்லறமேற்கும் அவருக்கு மனம்நிறைந்த வாழ்த்துகள்.” என குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னர் சினேகன் திருமண செய்திகள் வைரலாகின. இதையடுத்து கடந்த ஜூலை மாதம் சினேகன் - கன்னிகா திருமணம் மகிழ்வுடன் நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அதேபோல கன்னிகா சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் , நடிகையாகவும் இருந்தவர். கே. பாலசந்தர் இயக்கத்தில் கலைஞர் டிவியில் அமுதா ஒரு ஆச்சரியக் குறி தொடரின் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து தேவராட்டம், அடுத்த சாட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சன் டி.வியில் ‘கல்யாண வீடு’ என்ற தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தவிர சிலம்பத்தை முறையாக கற்று தேர்ந்தவர். இந்நிலையில் திரையுலகை சேர்ந்த பல்வேறு தரப்பினரும் இருவருக்கும் நேரில் கலந்துக் கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது திருமணத்தில், இசையமைப்பாளர் இளையராஜா கலந்துக் கொள்ளவில்லை. இதையடுத்து திருமணத்தில் கலந்துக்கொள்ள முடியாத காரணத்தால், இருவரையும் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. மேலும் சிநேகனுக்கு தங்க மோதிரத்தையும் பரிசாக வழங்கியுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சிநேகன். அதில் “எங்கள் திருமணத்திற்கு வர இயலாததால் எங்களை நேரில் அழைத்து மோதிரம் அணிவித்து தன் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்து மகிழ்ந்த இசைஞானிக்கு நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.