சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் வழங்கும் விழா (IIFA 2022 ) இன் 22வது விருது வழங்கும் விழா அபுதாபியின் யாஸ் தீவில் உள்ள யாஸ் பே வாட்டர்ஃபிரண்டின் ஒரு பகுதியான எதிஹாட் அரங்கில் நடைபெற்றது. இந்த  விழாவை நடிகர்கள் சல்மான் கான், ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் மணீஷ் பால் ஆகியோர் முன்னின்று தொகுத்து வழங்கினர்.




 


IIFA 2022 :



இதில், நடிகர் நடிகைகளான ரன்வீர் சிங், கார்த்திக் ஆர்யன், சாரா அலி கான், வருண் தவான், அனன்யா பாண்டே, திவ்யா கோஸ்லா குமார் மற்றும் நோரா பதேஹி உள்ளிட்டோர் சில குறிப்பிட்ட பகுதிகளை தொகுத்து வழங்குகின்றனர். இந்த நிகழ்வில் விக்கி கௌஷலின் பீரியாடிக் படமான சர்தார் உதம்  ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் உட்பட மூன்று விருதுகளை வென்றது.2022 தொழில்நுட்ப விருது வென்றவர்கள் IIFA ராக்ஸ் 2022 விழாவில் அறிவிக்கப்பட்டனர்.





 முழுமையான வெற்றியாளர்கள் பட்டியலை கீழே காணலாம்


சிறந்த நடிகர் (ஆண்) - சர்தார் உதம் படத்திற்காக பாலிவுட் நடிகர் விக்கி கௌஷலிற்கு வழங்கப்பட்டது.


சிறந்த நடிகர் (பெண்) - மிமி திரைப்படத்திற்க்காக  நடிகை கிருதி சனோன் பெற்றார்.


சிறந்த இயக்குனர் - ஷெர்ஷா படத்திற்காக  இயக்குநர் விஷ்ணுவரதனுக்கு கிடைத்தது.


சிறந்த படம் -  Shershaah  படத்திற்காக ஹிரூ யாஷ் ஜோஹர், கரண் ஜோஹர், அபூர்வா மேத்தா, ஷபீர் பாக்ஸ்வாலா, அஜய் ஷா, ஹிமான்ஷு காந்தி ஆகியோக்கு கிடைத்தது .


சிறந்த பின்னணிப் பாடகி - 'ராதன் லம்பியான்' என்னும் ஷெர்ஷா படத்தில் இடம்பெற்ற பாடலுக்காக அசீஸ் கவுர் பெற்றுக்கொண்டார்.


சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண் )- 'ராதன் லம்பியான்' என்னும் ஷெர்ஷா படத்தில் இடம்பெற்ற பாடலுக்காக ஜூபின் நௌடியல் பெற்றுக்கொண்டார்.


சிறந்த பாடல் வரிகள் –  'லெஹ்ரா டூ'  என்னும் 83 படத்தில் இடம்பெற்ற  பாடலுக்காக கவுசர் முனீர்க்கு வழங்கப்பட்டது.


சிறந்த இசை இயக்கம் –  இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் பெற்றார்.  அத்ராங்கி ரே மற்றும் ஜஸ்லீன் ராயல், ஜாவேத்-மொஹ்சின், விக்ரம் மாண்ட்ரோஸ், பி ப்ராக் உள்ளிட்டவைகளுக்காக வழங்கப்பட்டது.


சிறந்த அறிமுக நடிகர் (ஆண்) - தடாப் படத்திற்காக அஹான் ஷெட்டி 


சிறந்த அறிமுக நடிகை ( பெண் ) - பன்டி அவுர்பப்லி 2 படத்திற்காக ஷர்வரி வாக்கிற்கு கிடைத்தது. 


சிறந்த கதை தழுவல் - கபீர் கான், சஞ்சய் பூரன் சிங் சவுகானிற்கு 83 படத்திற்காக வழங்கப்பட்டது.


சிறந்த அசல் கதை - அனுராக் பாசுவின் லுடோ படம்


சிறந்த துணை நடிகை - மிமி திரைப்படத்திற்காக  சாய் தம்ஹங்கருக்கு வழங்கப்பட்டது.


சிறந்த துணை நடிகர் - லுடோவுக்காக பங்கஜ் திரிபாதிக்கு கிடைத்திருக்கிறது.