தினமும் வாழ்க்கையில் சில ஊக்கத்திற்காக ஏங்கி இருக்கும் நபர்களுக்கு ஒரு சிறுவன் செயலில் மிகுந்த நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒரு கால் உடன் சிறுவன் ஒருவர் தினமும் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து பள்ளிக்கு சென்று வரும் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஹந்துவரா பகுதியைச் சேர்ந்தவர் பர்வேஷ். இவருக்கு ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளியாக உள்ளார். ஒரு காலை அவர் இழந்திருந்தாலும் தன்னுடைய மனதில் எப்போதும் நம்பிக்கையை இழக்காதவராக இருந்து வருகிறார். இவர் தினமும் தன்னுடைய வீட்டிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் ஒரே காலில் நடந்து சென்று பள்ளிப்படிப்பை தொடர்ந்து வருகிறார். இவர் பள்ளிக்கு செல்லும் வீடியோ நேற்று சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
மேலும் அந்த சிறுவன், “இந்தப் பகுதியில் சாலைகள் சரியாக இல்லை. எனக்கு செயற்கை கால் கிடைத்தால் உதவியானதாக இருக்கும். எனக்கு வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இந்த சிறுவனின் வீடியோவை பார்த்து பலரும் ஆச்சரியத்துடன் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த வீடியோவை பார்த்த மத்திய சமூக நலத்துறை அமைச்சர் பிரத்திமா பௌமிக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இந்த வீடியோவை வெளியேகொண்டு வந்ததற்கு நன்றி. ஸ்ரீநகரிலுள்ள மத்திய சமூக நலத்துறைஇயக்குநரகம் மூலம் இந்த சிறுவனை தொடர்பு கொண்டு அவருக்கு தேவைப்பட்ட விஷயங்களை அரசு நிச்சயம் உதவி செய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்