அவன் இவன் திரைப்படத்திற்கு பிறகு ஆர்யா விஷால் இணையும் திரைப்படம் ‘எனிமி’ இந்த திரைப்படம் கடந்த ஆயுத பூஜை விழா அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு , தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களுடன் தீபாவளி ரேஸில் பங்கேற்கவுள்ளது.எனிமி படத்தை ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் டிக்டாக் பிரபலம் மிருணாளினி கதாநாயகியாக அறிமுகாகியுள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.நிஜ வாழ்க்கையும் நெருக்கிய நண்பர்களான ஆர்யா மற்றும் விஷால் திரையில் மீண்டும் இணைய இருப்பது அவர்களது ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எனிமி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஷால் , ஆர்யாவின் பாக்ஸிங் திறமை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.







ஆர்யா சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து முடித்த கையோடு எனிமி படத்தில் நடிக்க வந்துள்ளார். அப்போது கிளைமேக்ஸ் சண்டைக்காட்சிகள் எடுக்கப்படிருக்கிறது.அப்போது நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்றை விஷால் பகிர்ந்துள்ளார்.  தினமும் பாக்ஸிங் வகுப்பிற்கு செல்வார் ஆர்யா என தெரிவிக்கும் விஷால் , இப்போது இவர் நினைத்தால் சாம்பியன்ஷிப் போட்டிக்கே செல்லலாம். பட ஷூட்டிங் எதுவும் இல்லை என்றால் போட்டிகளில் கலந்துக்கொள்ளலாம். அந்த அளவிற்கு தகுதி வாய்ந்தவராக மாறிவிட்டார். இரண்டாவது பரிசாவது நிச்சயம் அவருக்கு கிடைக்கும். என்றார். மேலும் எனிமி படத்தின்  சண்டைக்காட்சியின் போது கோரியோகிராஃப் இல்லாமல் , சண்டை இயக்குநர் விஷாலை அடிக்க சொன்னதாகவும், ஆர்யா உண்மையாகவே பாக்ஸர் போலவே விஷாலை தாக்கியதாகவும் தெரிவிக்கிறார். மேலும் அந்த சண்டைக்காட்சி எடுத்த பொழுது, ஆர்யாவிடம் விஷால் போதும் அடித்தது வலிக்கிறது என்றாராம். ஆனலும் ஆர்யா நிறுத்தவில்லையாம். இதன் மூலம் அவர் நிஜ பாக்ஸராகவே மாறிவிட்டார் என்கிறார் விஷால்.






முன்னதாக ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் “ மிகவும் கடினமான கிளைமேக்ஸ் காட்சி நமது புரட்சி தளபதி விஷாலுடன் எடுத்து முடிக்கப்பட்டது. தீபாவளி வெளியீட்டிற்காக காத்திருக்கிறோம். இப்படியான சண்டைக்காட்சிகளில் நடித்தோமா என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.விரைவில் திரையரங்குகளில் சந்திக்கிறோம் என குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்திருந்தார்.வினோத்குமார் தயாரித்துள்ள எனிமி படத்தின் பாடல்களுக்கு தமன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.