தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் சாரதாவின் பிறந்தநாளை கொண்டாட பாரதி எல்லாம் ஏற்பாடுகளையும் செய்து வைத்த நிலையில் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் பாரதி சாரதாவுக்காக ஒரு கிப்ட் கொடுக்கிறாள். அதன் பிறகு ஆதி பாரதியிடம் தமிழ் பாப்பா என்ன அப்பான்னு கூப்பிட்டா கல்யாணம் பண்ணிப்பீங்களா என்று கேட்க தமிழ் வாசுவும் மட்டும்தான் அப்பாவா நினைக்கிறான் உங்கள் அப்படி ஒரு நாளும் கூப்பிட மாட்டா என்று சொல்கிறாள். 


அதன் பிறகு வீட்டுக்கு வந்த பாரதி வாசுவின் போட்டோவை பார்த்து ஒரு பக்கம் துறையுடன் கல்யாணம் ஏற்பாடுகள் நடக்க இன்னொரு பக்கம் ஆதி காதலை சொல்வதை பற்றி சொல்லி என்னை எதுக்கு விட்டுட்டு போன என்று கலங்குகிறாள். 


மறுபக்கம் ஆதி பாரதியின் போட்டோவை பார்த்துக் கொண்டே எனக்கு என்னமோ உங்க கூட ரொம்ப நாள் வாழ்ந்த மாதிரியே தோணுது எனக்கு நீங்களும் தமிழும் ரொம்ப முக்கியம் என்ன நடந்தாலும் உங்களை விட்டுட்டு போக மாட்டேன் என்று பேசுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: ”உங்க கேமுக்கு என் பெயரையா பயன்படுத்துவீங்க?" அர்ச்சனாவிடம் வினுஷா கேட்ட பளார் கேள்வி!


Bigg Boss Tamil: பி.ஆர் எல்லாம் வேணாம்! பிக்பாஸில் அசால்ட்டாக மக்கள் மனங்களை வென்ற போட்டியாளர்கள்!