Bigg Boss 7Tamil Vijay Varma: பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் மிட் வீக் எவிக்‌ஷனில் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பலர் உள்ளனர். 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொருஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு பிக்பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 

 

முந்தைய சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த பிக்பாஸ் சீசனில் இரண்டு பிக்பாஸ் வீடுகள், 5 வைல்டு கார்டு என்ட்ரி, மிட் வீக் எவிக்‌ஷன் என சற்று மாற்றங்களைக் கொண்டிருந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களைக் கடந்துள்ளது. பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கடந்த வாரம் விசித்ரா எவிக்‌ஷன் செய்யப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் மூத்த போட்டியாளராக விசித்ரா இருந்தாலும் சக போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்து வந்தார். இதனால், விசித்ரா இறுதிப்போட்டிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெளியேறினார். 

 

அடுத்ததாக பிக்பாஸ் வீட்டில் விஷ்ணு, தினேஷ், விஜய் வர்மா, மாயா, அர்ச்சனா, மணி இருந்தனர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்த விஜய் வர்மா மிட்வீக் எவிக்‌ஷனில் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்த விஜய் வர்மா போட்டியாளர்களிடம் கோபத்தை காட்டியதுடன், வன்முறையாகப் பேசினார். இதனால், விமர்சனத்துக்கு ஆளான அவர் 26ஆவது நாளில் எவிக்ட் ஆகி வெளியேறினார். அதைத் தொடர்ந்து கடந்த 56ஆவது நாளில் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்கு விஜய் வர்மா வந்தார். 





ரீ என்ட்ரி கொடுத்த விஜய் வர்மா, இந்த முறை நிதானித்து கேம் ப்ளே ஸ்ட்ரேட்டஜியை கெட்டியாகப் பிடித்து விளையாடி வந்தார். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக மிட் வீக் எவிக்‌ஷனில் விஜய் வர்மா வெளியேறியது அவரது ஃபேன்பேஸை அப்செட் செய்துள்ளது.