பிக்பாஸ் சீசன்:


பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இந்த வாரத்துடன் நிறைவு பெற உள்ளது. முந்தைய ஆறு சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் இரண்டு வீடுகள், டபுள் எவிக்‌ஷன், மிட்வீக் எவிக்‌ஷன், 5 வைல்டு கார்டு என்ட்ரி,  அடுத்தடுத்த எலிமினேஷன்ஸ் என முற்றிலும் மாறுப்பட்டதாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி உள்ளது.


இறுதிக்கட்டத்தில், மாயா, அர்ச்சனா, விஷ்ணு, தினேஷ், மணி மற்றும் விஜய் வர்மா உள்ளனர். இவர்களில் விஷ்ணு ஏற்கெனவே பைனலுக்கு சென்றுள்ளார். குறிப்பாக, இந்த சீசனில் மாயா, அர்ச்சான என இரண்டு பெண்கள் இறுதி வாரத்தில் உள்ளனர்.


இவர்களில் ஒருவர் தான் டைட்டில் வின்னர் என்று பேசப்பட்டு வருகிறது. இதுவரை நடந்த மொத்த பிக்பாஸ் சீசன்களையும் சேர்த்து ஒரு பெண் போட்டியாளர் ரித்விகா தான் டைட்டிலை வென்றிருக்கிறார். எனவே, இந்த சீசனில் யார் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். 


பிஆர் வேலை பார்த்தாரா அர்ச்சனா?


இதற்கிடையில், இறுதி வார களத்தில் இருக்கும் அர்ச்சனாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதே நேரத்தில் அர்ச்சனாவுக்கு அளவுக்கு அதிகமான ஓட்டுகள் கிடைக்கிறது. இதனால், சக போட்டியாளர்களும் பிஆர் வேலை செய்றீங்க என்று அர்ச்சனாவை கடுமையாக விமர்சித்து இருந்தனர்.


பொதுவாக, பிஆர் வைத்து வேலை பார்ப்பது என்பது தற்போது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. தங்களை பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காக அரசியல் கட்சி தலைவர்களில் தொடங்கி இப்போது பிக்பாஸ் போட்டியாளர்கள் வரை பலர் பிஆர் வைத்து வேலை செய்து வருகிறார்கள்.  




இருப்பினும், பிக்பாஸில் சிலர் போட்டியாளர்கள் பிஆர் வேலை செய்யாமல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றனர். முதல் சீசனில் ஓவியா தொடங்கி ஆறாவது சீசன் ஷிவின் வரை பிஆர் வேலை செய்யாமல் மக்கள் மனதைக் கவர்ந்துள்ளனர். 


ஓவியா முதல் ஷிவின் வரை:


முதல் சீசனில் ஓவியாவுக்கு அதிகப்படியான ஆதரவு இருந்தது. இருப்பினும், அவர் நிகழ்ச்சியன் பாதியிலேயே வெளியேறினார்.  இரண்டாவது சீசனில், ஆரம்ப முதல் முடிவு வரை எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல் இருந்தது ரித்விகா.


இவ்வளவு ஏன், மற்ற போட்டியாளர்கள் ரித்விகாவைப் பற்றி குறை கூறினாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கூலாக இறுதி வரை இருந்து டைட்டிலையும் வென்றிருக்கிறார்.  




பிஆர் வேலை செய்யாமல் இவருக்கும் ரசிகர்கள் இருக்கின்றனர்.  மூன்றாவது சீசனை பொருத்தவரை, அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் லாஸ்லியா. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே சுட்டித்தனமாக இருந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.




இதனை தொடர்ந்து, நான்காவது சீசனில் ஆரி மக்கள் மனதை கவர்ந்து டைட்டிலும் அடித்திருந்தார். ஐந்தாவது சீசனில், அமீர், பாவணி, ஆறாவது சீசனில், ஷிவின், கதிரவன் ஆகியோர் பிஆர் வேலை செய்யாமல் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றனர். குறிப்பாக, கடந்த சீசனில் திருநங்கை ஷிவினுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ஆதரவு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.